மியான்மர் அதிபர் பதவிக்கு முன்னாள் டிரைவரை பரிந்துரை செய்த சூகி
நைபிடாவ்: மியான்மரின் புதிய அதிபராக தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியின் முன்னாள் டிரைவர் ஹ்தின் க்யாவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் ராணுவத்தால் பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த 2010ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

ராணுவ ஆட்சியின்போது மாற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி சூகி எந்த ஒரு உயர் பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிபராக முடியாது. தான் அதிபர் ஆகாவிட்டாலும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை அதிபராக்க சூகி முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நம்பிக்கையின் நட்சத்திரமான முன்னாள் டிரவைர் ஹ்தின் க்யாவை அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சூகி. 69 வயதாகும் ஹ்தின் கியாவ் சூகியின் பள்ளி கால நண்பர். மேலும் அவரது அறக்கட்டளையை நடத்த உதவி செய்து வருபவர்.
சூகி ஹ்தினை தான் அதிபராக பரிந்துரைக்கக்கூடும் என்று மக்கள் எதிர்பார்த்தது போன்றே நடந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications