"நெஞ்சே பதறுகிறதே".. அப்பதான் பிரிஞ்சி போனாங்க.. அதுக்குள்ள உடையும் "பற்கள்".. ஹய்யய்யோ தாலிபன்கள்
தாலிபன்கள் அடுத்த உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆப்கன் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்களாம்
காபூல்: அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு பெண்களை கதிகலங்க வைத்து வரும் தாலிபன்கள் இன்னொரு பகீரையும் கிளப்பி விட்டுள்ளனர். இதனால் பெண்கள் கண்ணீர் வடிக்கும் நிலைமைக்கு சென்றுள்ள நிலையில், உலக நாடுகள் ஆப்கனின் தொடர் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பெண்களுக்கான கல்வி முதல் எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன.. கடந்த 2 வருடங்களாகவே பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.
பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. மீடியாக்களிலும் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிலி மகளிர்
மேலும், ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் தடையை விதித்துள்ளனர்.. பள்ளிகளுக்கு பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுப்பப்படாத நிலையில், பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பது ஓரளவு ஆறுதலை தந்தது.. ஆனால், அதற்கும் தாலிபன்கள் இடைக்காலத் தடையை போட்டுவிட்டார்கள்.. இதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்கள்..

டிரஸ்ஸஸ்
"படிக்க வரும்போது, ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்று கண்டிஷன் உள்ளது.. ஆனால், ஏதோ கல்யாணத்துக்கு வருவது போல, மாணவிகள் டிரஸ் அணிந்து வருகின்றனர்... அதுமட்டுமல்ல, பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள், பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு கொஞ்சம்கூட ஒத்துவராதவை... அதனால்தான் இப்படி ஒரு தடையை அறிவித்தோம்" என்று ஆப்கன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதனால், மாணவ, மாணவிகள் கொந்தளித்து, தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்தினார்கள்.

திட்டவட்டம்
இப்படி ஒரு பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த பகீரை கிளப்பினார்கள் தாலிபன்கள்.. இனிமேல் அந்த நாட்டு பெண்கள் யாருமே, ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெறக்கூடாதாம்.. முதல் கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற அனுமதி கிடையாது என்றும், பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள்.. அதுமட்டுமல்ல, இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தாலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

டைவர்ஸ்
இதோ இப்போது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மறுபடியும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்களாம்.. இதற்கு பெண்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது... ஏற்கனவே, கருத்து வேறுபாடுகளால், தகராறுகள் வெடித்து, கணவனின் கொடுமை தாங்காமல்தான், விவாகரத்து வாங்கி கொண்டு போனார்கள்.. இப்போது மறுபடியும் விவாகரத்தான பெண்கள், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்..

கண்ணீர் பெண்கள்
இருந்தபோதிலும் விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள், பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்களாம்.. அந்த பெண்களின் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி கண்ணீர் வடிக்கிறார்கள். எதை பற்றியும் கவலைப்படாத தாலிபன்களோ, டைவர்ஸ் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வரும் கணவன்-மனைவிகளை எல்லாம் ஒன்றிணைக்கும் பணியை துவங்கி உள்ளார்களாம். இதை கேள்விப்பட்டு, பல பெண்கள் பயந்து போய், தாலிபன்கள் கண்ணில் பட்டுவிடாமல் ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறார்களாம்...!!

சிறுமிகள்
விவாகரத்தை கோர்ட்டுக்கு கொண்டுபோனாலும், நீதி மறுக்கப்படுவதாகவும், நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என ஆணாதிக்கம் நிறைந்ததாகவே ஆப்கன் இருப்பதாகவும் அந்த பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருப்பதால், இந்தியா உட்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.. அந்தவகையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குப் பல நாடுகள் வருத்தம் தெரிவித்திருக்கின்றன.

கண்ணீர் கண்ணீர்
குறிப்பாக, சவுதி மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஹலா மஸ்யாத் அல் துவைஜ்ரி, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசும்போது, "பெண்கள்மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஆப்கனில் ரத்து செய்ய வேண்டும்... இதனால் அவர்களும் எந்தவித வேறுபாடுமின்றி முழு உரிமைகளைக் கொண்டாட முடியும்" என்றார். அதுபோலவே, ஜெர்மன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அன்னலீனா பியர்போக் பேசும்போது, "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவம் போன்ற தேவைகளை ஜெர்மனி தொடர்ந்து செய்யும்... பெண்களுக்கு அங்கு இழைக்கப்படும் கொடூரமான கட்டுப்பாடுகளுக்கு எதிரான எங்கள் முயற்சிகளால், எதுவும் மாறப்போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும் என்றாலும், இந்த முயற்சிகள், வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படாத ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைக்கானது.. பள்ளி செல்ல ஆசைப்படும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமானது" என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications