"டச் பண்ணாதீங்க".. அதிர்ந்து போன பெண்கள்.. அடுத்த குண்டை போட்ட தாலிபன்கள்.. மலங்க விழிக்கும் ஆப்கன்
ஆப்கன் பெண்களுக்கு எதிராக தாலிபன்கள் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்
காபூல்: ஒவ்வொரு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தாலிபன்கள், இப்போது இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டு, ஆப்கன் பெண்களை நிலைகுலைய வைத்து வருகிறார்கள்.. இதனால் உலக நாடுகள் அதிர்ந்து போய் உள்ளன.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.
மேலும், ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கவலைகள்
சில நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர்.. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்தன.. ஆனால், இந்த தடைக்கான காரணம் குறித்து தாலிபான் அரசு ஒரு விளக்கம் அளித்திருந்தது..

கண்டிஷன்
"பல்கலைக்கழகம், கல்லூரிக்கு போகும் மாணவிகள், நாங்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை. டிரஸ் தொடர்பான விதிகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை... முக்கியமாக, கல்வி நிலையங்களுக்கு வரும்போது, ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்று கண்டிஷன் உள்ளது.. ஆனால், ஏதோ கல்யாணத்துக்கு வருவது போல, மாணவிகள் டிரஸ் அணிந்து வருகின்றனர்... அதுமட்டுமல்ல, பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள், பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு கொஞ்சம்கூட ஒத்துவராதவை... அதனால்தான் இப்படி ஒரு தடையை அறிவித்தோம்" என்று கூறியிருந்தது.

பீய்ச்சிய தண்ணீர்
கடந்த ஒன்றரை வருட காலமாகவே, பொறுத்து பொறுத்து போயிருந்த மாணவிகள், தாலிபனின் இந்த அறிவிப்பினால் கொந்தளித்துவிட்டார்கள்.. தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. மாணவ, மாணவிகள் மீது பாதுகாப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டும் வீடியோக்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.. ஆனால், பெண்களை மறுபடியும் கல்லூரிகளில், பல்கலையில் அனுமதிக்கப்படும் வரை, தாங்களும் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்துள்ளனர்...

டவுட்தான்
மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கன் அரசு அமைத்துள்ளதாக சொல்லப்பட்டாலும், மாணவர்கள் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படுவார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.. இதோ இன்னொரு அதிர்ச்சியை தாலிபன்கள் அறிவித்துவிட்டார்கள்.. இனிமேல் அந்த நாட்டு பெண்கள் யாருமே, ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெறக்கூடாதாம்.. இப்படி ஒரு அறிவிப்பை கொண்டுவந்துள்ளதுடன், முதல் கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..

அடுத்த ஷாக்
மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற அனுமதி இல்லையாம்.. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டுமாம்.. இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தாலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவால், ஒட்டுமொத்த நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன..

வலிய குரல்
ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பலமுறை, தன்னுடைய கண்டனக்குரல்களை பதிவுசெய்தும்கூட, தாலிபன்கள் அடங்கவேயில்லை.. பெண்களுக்கு எதிரான அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.. கொஞ்சம் காலமாகத்தான், தாலிபன் பெண்கள், கல்வியை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர்.. ஆனால், அதற்கள் இந்த தாலிபன்கள் வந்துவிட்டார்கள்.. பெண்களுக்கு, திடீரென அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், அவர்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி வருகிறது.. ஆப்கனின் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகளும் உற்றுகவனித்து வருவதுடன், தங்கள் கண்டனங்களையும் வலிய பதிவு செய்து வருகிறார்கள்...!!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications