நோ சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்? சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் மோதலின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நடப்பு ஆண்டில் 10 வது சீசன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பித்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு மறுநாள் இரவே இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவும் பாகிஸ்தான் இந்தியாவின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது.

huge-setback-for-pakistan-uae-unlikely-to-approve-big-psl-2025-league

300 முதல் 400 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் இதனை இந்திய ராணுவம் அழித்து ஒழித்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து நேற்று இரவும் இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதலை நடத்த முயற்சித்தது. இதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி அழித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் லீக் போட்டி நிறுத்தம்

நேற்று பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 6 அணிகள் பங்கேறு வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை ஒத்திவைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 10 வது சீசன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பித்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அமீரகத்தில் நடத்த திட்டமிட்டது. ஆனால் அமீரக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் போட்டியை நடத்த முடியாமல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். முன்னதாக ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்த 27-வது லீக் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

முன்னதாக இந்தியாவிலும் பாதுகாப்பு கருதி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 25க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் இந்திய ராணுவம் அவற்றை இடைமறித்து அழித்தது. தொடர்ந்து எல்லை மாநிலங்களில் பதற்றம் நிலவி வருவதால் நேற்று இரவும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் போர் பாதுகாப்பு நடவடிக்கையின் எதிரொலியாக சைரன் ஒலிக்கப்பட்டது.

இதேபோன்று டெல்லியில் உள்ள முக்கிய நினைவு சின்னங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வட இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. இந்தியாவின் வடக்கு, வடமேற்கு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் வரும் 15 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+