ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்!
ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார்.
விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இங்குள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது மிகவும் உன்னிப்பானதாக இல்லை என்பதும் கூட்ட நெரிசலுக்குக் காரணம். இப்படிச் செல்வோரில் பலர் விமானத்தின் லேன்டிங் பகுதி வழியாக சிரமப்பட்டு விமானத்திற்குள் ஏறுவதும் அங்கு சகஜமாகும். இதில் பலர் அடிபட்டு இறக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications