செவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடா.. உலா வரும் புரளி
வாஷிங்டன்: சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் ஒரு மனித மண்டை ஓட்டை நாசா கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் புரளி கிளப்பி வருகின்றனர்.
ஆனால் அதெல்லாம் சும்மா கப்சா என்று நாசா விளக்கியுள்ளது. உண்மையில் அந்த மண்டை ஓட்டுத் தோற்றத்துடன் கூடிய படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபப்பட்ட நாசாவின் ஸ்பிரிட் ரோவர் விண்கலத்தின் கேமரா படம் பிடித்துள்ளது.
இருப்பினும் அது மண்டை ஓடு அல்ல என்று நாசா கூறுகிறது.
வேகமாக பரவும் வீடியோ:
இந்தப் படம் தொடர்பான வீடியோ தற்போது யூடியூப் மூலமாக வேகமாக பரவியுள்ளது. மேலும் சிலர் அதில் சில மாற்றங்களைச் செய்து மண்டை ஓடு போல சித்தரித்து விட்டதால் பெரும் ஹிட்டாகி விட்டது.

கப்சா விடும் கதையாளர்கள்:
டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்ட அந்தப் படத்தை வைத்து செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள் இருந்திருக்கலாம், இருக்கலாம் என்று சிலர் கதை விட்டு வருகின்றனர்.

சும்மா லுலுலுவாம்:
ஆனால் படத்தை சற்று உற்றுப் பார்த்தால் அது வெறும் கதை என்பது புரியும். செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைதான் அது என்றும் நாசா விளக்கியுள்ளது.

நம்பும்படியான செய்தியில்லை:
இந்த படத்தில் இருப்பது மண்டை ஓடு அல்ல என்று ஹப்பிங்டன் போஸ்ட் இதழும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதை வைத்து செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் வசித்திருக்கலாம் என்ற கூற்றும் நம்பும்படியாக இல்லை என்றும் அது கூறியுள்ளது.

பல கதைகள் இருக்காம்:
இருப்பினும் இந்த மண்டை ஓட்டுச் சாயல் படத்தை வைத்து பலரும் பல கதைகளைக் கூறி வருகிறார்கள். இருப்பினும் ஒரு பிளாக்கில் இது நிச்சயம் மண்டை ஓடுதான். அதற்கான 80 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீதியையும் கிளப்புது:
மேலும் அந்த மண்டை ஓடானது மனித மண்டை ஓட்டை விட 15 முதல் 20 சதவீதம் பெரிதாக உள்ளதாகவும் அது கூறியுள்ளது. மேலும் அந்த மனிதனின் உயரம் 9 முதல 10 அடி கொண்டதாக இரு்ககலாம் என்றும் அது பீதியைக் கிளப்பியுள்ளது.

இருக்கு ஆனா இல்லை:
ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உலவிய மனித உருவம் கொண்ட வேற்றுகிரக வாசியின் மண்டை ஓடாக இது இருக்கலாம் என்றும் அது கூறுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications