லிபியா அருகே மீண்டும் துயரம்... அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 700 பேர் பலி
ரோம்: இத்தாலி அருகே அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக தப்பி வருபவர்கள் பயணம் செய்யும் படகுகள் அவ்வப்போது விபத்துக்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் கூட, அகதிகள் வந்த படகு ஒன்று விபத்தில் சிக்கி 400 பேர் பலியானார்கள். இந்நிலையில், இன்று லிபிய படகு ஒன்று இத்தாலி அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தப் படகில் 700க்கும் அதிகமான அகதிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 28 பேர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் லாரன்ஸ் ஜோல்ஸ் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விபத்தில் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லேம்பேடுசா என்ற இடம் நோக்கி இப்படகு போய்க் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications