மலேசியாவில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
கோலாலம்பூர்: தாய்லாந்தையொட்டியுள்ள மலேசிய எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தாய்லாந்தையொட்டியுள்ள பெர்லிஸ் மாநிலத்தில் 30 பெரிய சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தில் இருந்து மட்டும் 100க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை மலேசிய உள்துறை அமைச்சர் ஜஹித் ஹமீதி உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சவக்குழிகளில் இருந்து மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சவக்குழிகளில் இருக்கும் எலும்புக்கூடுகள் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டவர்களுடையது என்று நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எந்த நாட்டவர்களும் கடத்தி வரப்படவில்லை என்று மலேசிய அரசு அறிவித்த அடுத்த வாரத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றி கருத்து தெரிவிக்க மலேசிய போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து முஸ்லீம்கள் கடத்தி வரப்பட்டதில் மலேசியர்களுக்கு பங்கு உள்ளது என்று அமைச்சர் ஹமீதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications