லாட்வியா, இங்கிலாந்தில் வாடகைக்கு விடப்படும் கணவன்கள்.. இப்படியும் ஒரு சேவை.. ஆச்சரியமான தகவல்
லண்டன்: சில நாடுகளில் ஆண்கள் பற்றக்குறை அதிகமாக இருக்கிறது. இந்த பாலின வித்தியாசம் ஒருபுறம் எனில், உலகில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் நடைமுறை பல்வேறு நாடுகளில் இதுபற்றி தவறான புரிதல்கள் இருக்கிறது. பலதார மணம் என்ற ஒன்றை சில நாடுகள் பின்பற்றுகின்றன. அந்த வகையில் லாட்வியா மற்றும் இங்கிலாந்தில் "வாடகைக்கு விடப்படும் கணவன்" என்ற சேவையும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. பெயர் காரணமாக இப்படி புரிந்து கொள்ளப்பட்டாலும், வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்கு தான் இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் "வாடகைக்கு விடப்படும் கணவன்" என்ற சேவை நீண்ட காலமாக செயல்பாட்டில் இருக்கிறது. "Husband 4 Hire", "Hire A Hubby" என்ற பெயர்களில் இந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றன. வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவையைத்தான் இப்படி இங்கிலாந்தில் அழைக்கிறார்கள்.

ஆனால் வெளியில் இதுபற்றி சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது ஒரு தனிப்பட்ட உறவுக்காக துணையை வாடகைக்கு எடுப்பது என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. வீட்டில் பொதுவாகக் கணவர்கள் செய்யும் வேலைகளைச் செய்து முடிப்பதற்காக ஒரு திறமையான நபரைக் கட்டணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தும் சேவைக்குத்தான் "வாடகைக்கு விடப்படும் கணவன்" என்ற சேவை இருக்கிறது.
வீடுகளில் அல்லது அலுவலகங்களில் செய்ய வேண்டிய சின்ன சின்ன பழுதுபார்க்கும் வேலைகள் சீரமைப்புப் பணிகள், பர்னிச்சர் பொருட்களை இணைத்தல், பெயிண்டிங், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் போன்ற வேலைகளைச் செய்வதற்காக இந்தச் சேவை பயன்படுத்தப்படுகிறது.
இந்த சேவைக்கும், வாடகைக்கு கணவன்கள் என்ற பெயரை பயன்படுத்தப்படுவதற்கு காரணம் என்று பார்த்ததால், பாரம்பரியமாக மேற்கத்திய கலாச்சாரத்தில், வீடுகளில் உள்ள மின்சாரம், குழாய்கள், பழுதுபார்ப்பு போன்ற வேலைகளைப் பெரும்பாலும் வீட்டில் உள்ள ஆண் (கணவன்) கவனித்துக் கொள்வார் என்ற பொதுவான எண்ணம் இருந்து வந்தது. தனிமையில் இருக்கும் பெண்கள், மிகவும் பிஸியாக இருக்கும் தம்பதிகள் அல்லது இந்த வேலைகளைச் செய்யத் திறமை இல்லாதவர்கள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
எனவே தான் ஆங்கிலத்தில் "Hire A Hubby" அல்லது "Husband 4 Hire" போன்ற பெயர்களில் இந்தச் சேவைகளை நிறுவனங்கள் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றன. "வாடகைக் கணவன்" (Handyman என்று அழைப்பார்கள்) செய்யும் வேலைகளின் பட்டியல்களை பார்ப்போம்.
வீட்டுப் பழுதுபார்க்கும் பணிகளை செய்வார்கள். குழாய்களில் ஏற்படும் சிறிய கசிவுகளைச் சரிசெய்தல், மின்சார வேலைகளை (லைட் ஃபிக்சிங், ஸ்விட்ச் மாற்றுவது) செய்வார்கள்.
பொருட்களை மாட்டிவிடுவார்கள். உதாரணமாக வீடுகளில் அலமாரிகள், திரைச்சீலை கம்பங்கள், டிவி-கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பெரிய புகைப்படங்கள் மற்றும் பெரிய கண்ணாடிகளைச் சுவரில் மாட்டித்தருவது போன்ற சேவைகள் செய்வார்கள். கடைகளில் இருந்து வாங்கி பிரித்துப் போடப்பட்ட மரச் சாமான்களை ஒன்று சேர்ப்பார்கள். கட்டில், பர்னிச்சர், மேஜை போன்ற பல்வேறு பர்னிச்சர் பொருட்களை மாட்டுவதற்கு உதவி செய்வார்கள். அதேபோல் வீடுகளில், தோட்டங்களில், சிறிய தோட்ட வேலைகளை செய்ய, வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்ய இந்த சேவைகள் உள்ளன. அதேபோல் வீட்டு கூரை குழாய்களை சுத்தம் செய்யும் வேலைகளையும் செய்து தருகிறார்கள்.
நம்மூர்களில் வீட்டு வேலைகளை செய்து தருவது மாதிரியான சேவைகள் தான். இந்த சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து நிறுவனங்கள் சேவைகளை செய்து தருகின்றன, வேலைக்கு ஆகும் நேரத்தைப் பொறுத்து (மணிநேரம் அல்லது நாள் முழுவதும்) கட்டணம் வசூலிக்கப்பார்கள்.
இங்கிலாந்தை போலவே லாட்வியாவிலும் வாடகைக்கு விடப்படும் கணவன்கள் என்ற சேவை குறித்து ஊடகங்களே தவறாக பிரிந்து கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன, லாட்வியா நாட்டில் 100 ஆண்களுக்கு 116 பெண்கள் இருக்கின்றனர். ஆண்களிலும் பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், இளம் பெண்களுக்கு ஏற்ற ஜோடிகள் கிடைக்காமல் இருக்கிறார்கள். இதனால் கணவர்களை வாடகைக்கு வாங்கும் கலாசாரம் அங்கு அதிகரித்துள்ளதாக தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஏனெனில் லாட்வியாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம் என்ற புள்ளிவிவரம் உண்மைதான் என்றாலும் அதற்கு ஆண்களின் குறைந்த ஆயுட்காலம் தான் காரணம். ஆனால், அதன் காரணமாக கணவர்களை வாடகைக்கு வாங்கும் கலாசாரம் அங்கு அதிகரித்துள்ளது என்பது உண்மையே கிடயாது. அது இங்கிலாந்தை போலவே வீட்டுப் பராமரிப்புச் சேவையின் தவறான மொழிபெயர்ப்பு ஆகும். லாட்வியாவில் எந்தவொரு சட்டபூர்வமான அல்லது சமூகரீதியான அமைப்பும், திருமணம் செய்வதற்காக அல்லது துணையாக இருப்பதற்காக ஆண்களை வாடகைக்கு வழங்கும் நடைமுறை கிடையாது.
லட்வியாவில் பல இளம் பெண்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற துணையைத் தேடுவதில் சிரமங்களை எதிர்கொள்வது ஒரு சமூகப் பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாக, பல லாட்வியன் பெண்கள் வேறு ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்து அங்கு திருமணம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை. வாடகைக்கு கணவன்கள் என்பது, வீட்டு வேலைக்கு ஆண்கள் என்ற சேவை தான். ஆனால் இதனை மொழிபெயர்க்கும் போது தவறாக மொழி பெயர்க்கிறார்கள். இதுவே வதந்திக்கு காரணம் ஆகும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications