என்னாது.. ஐஸ்கிரீமை பெண்கள் நாக்கால் சாப்பிடக் கூடாதா.. அலற வைக்கும் துருக்கி சட்டம்
ஐஸ் கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக் கூடாது என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

அங்காரா: துருக்கி பெண்கள் எப்படி ஐஸ்கிரீமை சாப்பிட வேண்டும் என்று ரூல்ஸ் போட்டுள்ள சமாச்சாரம் நாடு முழுவதும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
துருக்கியில் பக்சிலர் மாவட்டத்தில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் பழமைவாதிகள்தான் வசித்து வருகிறார்கள்.
2 மாதத்திற்கான வகுப்பு இது. வாரம் 2 மணி நேரம் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், பெண்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உபதேசமே. பயிற்சி வகுப்பின் தலைப்புகூட "ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்" என்பதே.

மேக்கப் போடக்கூடாது
இதில் பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும், எப்படி நடந்து செல்ல வேண்டும், பேச வேண்டும் என்பது குறித்து ஏகப்பட்ட புதுப்புது ரூல்ஸ்கள் போடப்பட்டுள்ளது. வெளியில் வாகனங்களில் செல்லும்போது சரியாக அமர வேண்டும், சாப்பிடும்போது குறைவாக பேச வேண்டும், காலையில் ரொம்பவும் மேக்கப் போட்டுக் கொள்ள கூடாது. "ப்ரோ" போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.

விதிமுறைகள்
இதெல்லாம் பரவாயில்லை, ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்பது ஒரு தனி பாடம். இதில், நாக்கால் ஐஸ்கிரீமை பெண்கள் சாப்பிடக் கூடாதாம். ஐஸ்கிரீம் உருகிய பிறகுதான் சாப்பிட வேண்டுமாம். நாக்கால் ஏன் நக்கி சாப்பிடக்கூடாது என விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எதிர்ப்பு
ஆனால் இப்படி ஒரு விதிமுறையை கேள்விப்பட்டு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் எதற்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அடக்குமுறை
"நிறைய யோசனைகளை கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பெண்கள் ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை ஏற்று கொள்ளுங்கள், உங்கள் அடக்குமுறையை எங்கள் மீது திணிக்காதீர்கள்" என்று துருக்கி பெண்கள் அமைப்புகளே இதனை பகிரங்கமாக விமர்சித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications