இந்த விமானம் காணாமல் போனால் எப்படி இருக்கும்.. விபரீதம் அறியாமல் ஜோக் செய்த மலேசிய விமான பயணி!
ஆம்ஸ்டர்டாம்: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 370 விமானம் மாயமானதைக் குறிப்பட்டு நான் பயணம் செய்யவிருக்கும் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும் காணாமல் போனால் எப்படி இருக்கும் என்று கூறி தனது கடைசி பயணத்தின்போது டிவிட்டரில் ஜோக் அடித்த பயணி, கடைசியில் மரணத்தைத் தொட்ட சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமானத்தில் பயணித்த நெதர்லாந்தைச் சர்ந்த கார் பான் என்ற பெயருடைய அந்த பயணி தனது டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் போட்ட கருத்து இன்று உண்மையாகி அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் பெரும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.
கார் பான் விடுமுறைக்காக மலேசியா போய்க் கொண்டிருந்தார். அப்போதுதான் ரஷ்ய எல்லையில் வைத்து இந்த விமானத்தை சுட்டு வீ்ழ்த்தி விட்டனர்.

காணாமல் போனால்
தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கார் பான் கூறுகையில், இந்த விமானம் காணாமல் போனால் எப்படி இருக்கும்.. என்று ஜோக்காக கூறியிருந்தார்.

ஷிபோல் விமான நிலையத்திலிருந்து
மேலும் தான் ஏறவிருந்த அந்த சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் படத்தையும் அவர் போட்டுள்ளார் கார் பான். ஷிபோல் விமான நிலையம் அருகே என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பெரும் சோகத்தில் குடும்பத்தார்
தற்போது கார் பான் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அத்தனை பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் இவர் போட்ட இந்தப் படமும், ஜோக்கும் இப்போது வைரலாக பேஸ்புக்கில் பரவி வருகிறது. பலரும் இந்த ஜோக்கைப் பார்த்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

10 ஆயிரம் முறை ஷேர்
இந்தப் புகைப்படம் தற்போது 10 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரிலும் இது வைரல் போல பரவி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications