பெண்ணுடன் உறவு... 15 வயது சிறுவனின் ஆணுறுப்பை நறுக்கி, கண்ணைத் தோண்டிய கொடூரம்!
பெண்ணுடன் உறவு வைத்ததாக 15 வயது சிறுவனின் ஆணுறுப்பை துண்டித்து, கண்ணை தோண்டியெடுத்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
லாகூர்: பாகிஸ்தானில் தன் பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்ததாக 9-ஆம் வகுப்பு மாணவனின் ஆணுறுப்பை அவரது தந்தை துண்டித்த சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தைக்கு தெரியவந்தது. அந்த சிறுவனை கண்டித்தார். எனினும் அவர்களது உறவு தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

சிறுநீர் கழிக்க...
இதையடுத்து அந்த சிறுவனின் பள்ளிக்கு கூலிப்படைகளை அழைத்து கொண்டு அந்த பெண்ணின் தந்தை சென்றார். அந்த சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது அவனை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்றனர்.

கண்ணை தோண்டினர்
அங்கு அவனது ஆணுறுப்பை கத்தியால் துண்டித்தனர். இருந்தும் ஆத்திரம் அடங்காததால் அந்த சிறுவனின் கண்களை தோண்டி எடுத்து சாலையில் போட்டு விட்டு தப்பி சென்றனர்.

உயிருக்கு ஆபத்து இல்லை
இதைத் தொடர்ந்து சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரை காப்பாற்றினால் அவனது பார்வை பறிபோய் விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை போலீஸில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அந்தப் பெண்ணின் தந்தைக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

5 பேரை கைது
இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற சிறுவனின் தந்தை, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனிடையே இந்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications