கையேந்தும் பாகிஸ்தான்.. 11 புதிய கண்டிஷன்கள் போட்ட ஐஎம்எஃப்.. இனி ஒரு ரூபாய் கூட வராதாம்.. ஆப்பு!
இஸ்லாமாபாத்: பொருளாதாரத்தில் திணறி வரும் பாகிஸ்தான் உதவி கோரி சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இம்மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியால் பாகிஸ்தான் சரண்டர் ஆனது. இது ஒரு பக்கம் இருக்கப் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகத் தள்ளாடி வருகிறது. ஏற்கனவே அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் இது குறித்து உதவி கேட்டிருந்தனர்.

புதிய கண்டிஷன்கள்
ஆபரேஷன் சிந்தூரின் காலகட்டத்தில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைத் தாண்டி சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி அளித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் சர்வதேச நாணய நிதியம் போட்டுள்ள புதிய கண்டிஷன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த தவணையை ரிலீஸ் செய்யும் முன்பு 11 புதிய நிபந்தனைகளை அமல்படுத்த வேண்டும் எனப் பாகிஸ்தானுக்குச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவுடன் தேவையில்லாமல் பதற்றத்தை அதிகரிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டால் அது நிதி மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
என்ன நிபந்தனைகள்
மேலும் ரூ.17.6 டிரில்லியன் புதிய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தருவது, மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது, வரி அதிகரிப்பு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதட்டங்கள் மேலும் நீடித்தால் அல்லது மோசமடைந்தால் அது திட்டத்தின் நிதி, சீர்திருத்த இலக்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட பணியாளர் நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் கூட வராது
இப்போது பாகிஸ்தானுக்கு மேலும் 11 நிபந்தனைகளைச் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிலையில், இதன் மூலம் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளன. அதில் குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026 நிதியாண்டின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் 2025 ஜூன் இறுதிக்குள் இதைச் செய்திருக்க வேண்டும் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய வரி
மேலும், விவசாய வருமான வரிச் சட்டங்களை ஒரு விரிவான திட்டத்தின் மூலம் செயல்படுத்தும் மாகாணங்களுக்கும் ஒரு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 டீம்களை உருவாக்கச் சொல்லியுள்ளனர். இதையும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
மூன்றாவது புதிய நிபந்தனையின்படி, சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட வேண்டும். மற்றொரு புதிய நிபந்தனையின்படி 2027க்கு பிறகு நிதியை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து விரிவான திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு உருவாக்க வேண்டும்.
எரிசக்தித் துறை
அதிகபட்சமாக எரிசக்தித் துறையில் நான்கு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவையாவது வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்குள் மின்சார கட்டணத்தை மறுசீரமைக்க, அதாவது உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு இரண்டு முறையாவது கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப். மாதத்திற்குள் கேஸ் சிலிண்டர் உற்பத்திக்கு ஆகும் செலவுக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இது தவிர எனர்ஜி துறையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
மின்சார துறையே அங்குக் கடன் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால் மின்சார ரேட்டை உயர்த்தினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அங்குள்ள அரசு அஞ்சியுள்ளது. இதனால் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க.. இதனால் அரசின் கடன்கள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாகவே மின்சாரம் சார்ந்த எனர்ஜி துறையில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கார் இறக்குமதி
பாகிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட கார்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இப்போது பாகிஸ்தானில் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கச் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளைச் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications