Imran Khan: இம்ரான் கான் மீது சிறையில் கொடூர தாக்குதல்? துடிதுடித்து மரணம்? என்ன நடந்தது? வெளியான தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி பிரதமரான இம்ரான் கான் ஊழல் புகார்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் வைத்து அவர் மீது மிக மோசமான தாக்குதல் நடந்ததாகவும் இதனால் சிறையிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கடந்த இரு நாட்களாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகச் சிறை அதிகாரிகளே இப்போது விளக்கமளித்துள்ளனர்.
பாகிஸ்தானின் 19வது பிரதமராக 2018 முதல் 2022 வரை பதவியில் இருந்தவர் இம்ரான் கான்.. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளே காலை வாரியதால் இவரது ஆட்சி 2022ல் கவிழ்ந்தது. இதையடுத்து கடந்த 2023ல் இவர் ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான் கான் உயிரிழந்ததாக திடீரென இணையத்தில் தகவல் பரவியது.

விளக்கம்
இந்த தகவல்கள் நாளுக்கு நாள் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் நிலையில், ஒரு வழியாகப் பாகிஸ்தான் ஜெயில் நிர்வாகம் மவுனம் கலைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாகவும், அவர் அடயலா சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் பொய்யானது என மறுத்துள்ளனர். மேலும், அவர் ராவல்பிண்டி சிறையிலிருந்து ரகசியமாக மாற்றப்பட்டுவிட்டதாக வெளியான தகவல்களிலும் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலமாக இருக்கிறார்
இது தொடர்பாகப் பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் கூறுகையில், "அவர் அடயலா சிறையிலிருந்து அவர் மாற்றப்பட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளனர்.
கடந்த வாரம் இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் - நூர்ன் நியாஸி, அலீமா கான் மற்றும் டாக்டர் உஸ்மா கான் ஆகிய மூன்று பேரும் சிறைக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், இம்ரான் கானை சந்திக்க அனுமதி தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், இம்ரான் கானின் சகோதரிகள் சிறைக்கு வெளியே கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 3 வாரங்களாகவே தங்கள் சகோதரர் இம்ரான் கானை சந்திக்க தங்களுக்கு அனுமதி தரப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தீயாகப் பரவிய தகவல்
இதுவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவ முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் காவலில் இருக்கும்போது உயிரிழந்ததாக சில ஆப்கன் செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன. 72 வயதான இம்ரான் கான் மீது சிறையில் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் அவர் சொல்லப்பட்டது. மேலும், அவரது உடல் அடயலாவிலிருந்து அகற்றப்பட்டதாகவும் வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவின. இதனால் கடந்த இரு நாட்களாகவே இம்ரான் கானின் பெயர் உலகளவில் டிரெண்டானது.
இதையடுத்து இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் உடனடியாக பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், அவரை சந்திக்கவும் அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கானின் உடல்நிலை சீராக இருப்பதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வழக்கமான மருத்துவச் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாழ்க்கை
அதேபோல பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பும் இந்த தகவலை மறுத்துள்ளார். இம்ரான் கா் "பிரீமியம் வசதிகளை" அனுபவித்து வருவதாகக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும், "இம்ரான் கானின் உணவுப் பட்டியலைப் பாருங்கள்... ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் கூட கிடைக்காத உணவுகளை இம்ரான் கான் சாப்பிடுகிறார். டிவி, ஜிம், படுக்கை என எல்லாமே அவருக்குக் கிடைக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications