கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க!
கராச்சி: கராச்சியில் பங்குச் சந்தையில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்றும் தனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்திற்குள் கடந்த திங்கள்கிழமை ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கையெறி குண்டு வீசியும் தாக்குதல்களை நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஏற்கெனவே பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில் கராச்சி தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

நிலையற்றதன்மை
இதுகுறித்து அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் மும்பை தாக்குதலில் என்ன நடந்ததோ அது இங்கும் நடக்க வேண்டும் என அவர்கள் (இந்தியா) நினைக்கிறார்கள். நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

பாதுகாப்பு
எனவே இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த தாக்குதல் நடைபெறும் என்பது எங்களது அமைச்சரவைக்கு கடந்த 2 மாதங்களாக தெரியும். நான் என் அமைச்சர்களுக்கு அறிவித்தேன். புலனாய்வு அமைப்புகள் உச்சகட்ட பாதுகாப்பில் இருந்தனர் என்றார் இம்ரான்கான்.

பயங்கரம்
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் பாகிஸ்தான் போல் இல்லை. கராச்சி உள்பட உலகில் பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அதை கண்டிப்பதில் இந்தியாவுக்கு தயக்கம் ஏதும் இல்லை. உலக பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை தியாகி என்றவர்தானே இம்ரான் கான் என்று தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், கூச்சம் நாச்சம் இல்லாமல் இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி நீலிக் கண்ணீர் வடிப்பது தீவிரவாதத்தை காட்டிலும் பயங்கரமால்ல இருக்கு!
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications