சீனா மூளையை பாருங்க.. ‛பாண்டா’வை பார்க்கபோன மக்கள்.. உயிரியல் பூங்காவில் இருந்தது எது தெரியுமா?
பெய்ஜிங்: சீனாவில் ஷான்வேய் உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து ‛பாண்டா' கரடி என்று பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த நாய்க்கள் திடீரென்று குரைத்ததால் ‛குட்டு' வெளிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனா.. நம் அண்டை நாடாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து பொருட்களை போலவும் போலியான பொருட்களை தயாரித்து மார்க்கெட் செய்வது சீனாவுக்கு கைவந்த கலை. உதாரணமாக குறிப்பிட்ட பிராண்ட் ஒன்றின் பொருள் ரூ.50 ஆயிரம் என்று இருந்தால் அதேபோன்ற பொருளை சீனா தயாரித்து வெறும் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும்.

இப்படி போலி பிராண்டுகளை உருவாக்கி வழங்குவதில் சீனா தான் இப்போதும் ‛டாப்பில்' உள்ளது. இந்நிலையில் தான் தற்போது சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா என்று ஏமாற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் சீனாவின் ஷான்வேய் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு ‛பாண்டா' கரடிகள் என்பது இல்லாமல் இருந்தது. இதையடுத்து ‛பாண்டா' கரடிகளை கொண்டு வந்தால் இன்னும் உயிரியல் பூங்காவுக்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.
ஆனால் அவர்களுக்கு ‛பாண்டா' கரடி என்பது கிடைக்கவில்லை. இதையடுத்து உயிரியல் பூங்காவை சேர்ந்தவர்கள் நாய்களை பிடித்து ‛பாண்டா' கரடிகள் போல் பெயிண்ட் அடித்து கூண்டுக்குள் விட்டனர். அதன்பிறகு ‛பாண்டா'கரடிகள் உள்ளதாக விளம்பரம் செய்தனர். இதையடுத்து உயிரியல் பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
பொதுமக்கள் ஆர்வமாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த ‛பாண்டா' கரடிகளை பார்த்து ரசித்தனர். அப்போது பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இதற்கு அந்த ‛பாண்டா'வின் கரடிகளின் செயல்பாடுகள் தான் காரணம். பொதுமக்கள் பார்த்தபோதே ‛பாண்டா' கரடிகள் நாக்கை வெளியே நீட்டியப்படி இருந்தன. மேலும் திடீரென்று ‛லொள்.. லொள்..'' என குரைக்க தொடங்கியது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்க்கு பெயிண்ட் அடித்து ‛பாண்டா' கரடிகள் என தங்களை உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் ஏமாற்றியதை உணர்ந்தனர். இதனால் அவர்கள் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் தங்களுக்கான பணத்தை திரும்ப தரும்படி கோரி வாக்குவாதம் செய்தனர். ஆனால் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர், ‛‛இது நாய்களின் இனத்தை சேர்ந்த பாண்டா' எனக்கூறி சமாளிக்க முயன்றது.
ஆனால் பொதுமக்கள் விடாவில்லை. இதனால் வேறு வழியின்றி உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் நாய்களுக்கு ‛பாண்டா' போன்று பெயிண்ட் அடித்ததை ஒப்புக்கொண்டது. மேலும் சீனாவின் வடக்கு பகுதியில் வளர்க்கப்படும் ஸ்பிட்ஸ் வகை நாய் இனத்தை வாங்கி ‛பாண்டா' என ஏமாற்றியதை ஒப்புக்கொண்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications