நெருங்கும் தீபாவளி... வண்ண விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா'
தீபாவளி பண்டிகை கொண்டாட சிங்கப்பூர் இந்தியர்கள் தயாராகிவிட்டனர். அதற்காக தெருவெங்கும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் தெருவை அலங்கரிக்கின்றன.
சிங்கப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா நகரமெங்கும் வண்ணவிளக்கு அலங்காரம் களைகட்டியுள்ளது.
சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதனால் அங்கு இந்திய பண்டிகைகள் இந்தியாவில் கொண்டாடப்படுவதைப் போலவே விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்தாண்டு தீபாவளி வரும் 19ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அதனையடுத்து சிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா பகுதியில் அழகான வண்ண விளக்குகளான அலங்காரமும் தெருவெங்கும் ஜொலிக்கும் வகையில் பல வண்ணத் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.

தீபாவளிக் கோலம்
தீபாவளிக்காக வாசலில் தீப கோலங்கள் வரைவதுண்டு. சிலர் மணிக்கணக்காக செலவிட்டு அழகான ரங்கோலிக் கோலங்களைத் தீட்டுவார்கள். அதைபோல சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் வண்ண அலங்காரத்தில் தீபக் கோலமும் ரங்கோலிக் கோலமும் கொண்ட அலங்காரம் செய்யபப்ட்டுள்ளது.

தமிழில் வாழ்த்துகள்
தீபாவளிக்கு அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் விதமாக தீபாவளி நல் வாழ்த்துகள் என தமிழில் எழுதி அது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அரசர் கால விழா
நான்மாடத் தூண்களை நினைவுக்கூரும் வகையில் தெரு நெடுக தூண்கள் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது இலக்கியங்களில் அரசர் காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதை நிகழ்காலத்தில் காட்டுவது போல் உள்ளது.

கலர்புல் தீபாவளி
சிங்கப்பூர் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் அழகிய வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இரவு நேரங்களில் அவை மிளிரும்போது காண்போர் மனம் மயங்கும் வண்ணம் உள்ளது.
செய்தி: தங்கமணி கணேசன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications