அமெரிக்காவில் நடுவானில் பெயர்ந்து விழுந்த விமானத்தின் உள்சுவர்: பயணிகள் அலறல்
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து டல்லாஸுக்கு கிளம்பிய விமானத்தின் உட்புற மேற்கூரை பெயர்ந்து வந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 190 பேருடன் விமானம் ஒன்று டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகருக்கு திங்கட்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே உள்பகுதியில் ஏதோ சத்தம் வருவதை பயணிகள் கேட்டுள்ளனர். நேரம் ஆக ஆக விமானத்தின் உட்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் சுவர் பெயர்ந்து வரத் துவங்கியது.
இதை பார்த்த பயணிகள் பீதியில் அலறினர். அது வெறும் பிளாஸ்டிக் தான் அதனால் விமானம் டல்லாஸ் வரை செல்லும் என்று விமானி தெரிவித்தார். ஆனால் பிளாஸ்டிக் சுவர் வேகமாக பெயர்ந்து விழுந்ததை பார்த்த விமானி நெவாடாவில் இருந்து விமானத்தை சான் பிரான்சிஸ்கோவுக்கே திருப்பினார். விமானம் சான் பிரான்சிஸ்கோ நகரில் மதியம் 2.15 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த ஒருவர் பிளாஸ்டிக் பெயர்ந்து வந்ததை போட்டோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். ஒரு வேளை விமானம் விபத்துக்குள்ளானால் இது தனது மனைவிக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தாராம்.
பிளாஸ்டிக் சுவர் பெயர்ந்து வருவது சாதாரணமாக ஒன்று தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி டிட்சி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications