இந்தியா எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளம்.. திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து! பரபர சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள வெடிமருந்து சேமிப்பகம் வெடித்துச் சிதறியதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு மிக அருகே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகமர் சியால்கோட் . இங்கு தான் பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது.
சியால்கோட் உள்ள ராணுவ சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
இந்த விபத்தில் யாராவது உயிரிழந்துள்ளனரா அல்லது காயமடைந்துள்ளனரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்திற்கான காரணமும் உறுதியாகத் தெரியாத நிலையில், இது தொடர்பாக ராணுவத்தினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து பாக். நாட்டுப் பத்திரிக்கையாளர் ரிஷி சூரி தனது ட்விட்டரில், "வடக்கு பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் இருக்கும் ராணுவ தளத்தில் பலமுறை குண்டுவெடிப்பு. ஆரம்ப அறிகுறிகள் இது வெடிமருந்து சேமிக்கப்பட்டிருந்த பகுதி என்பது தெரிய வந்துள்ளது .இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
சியால்கோட் உள்ள இந்த ராணுவ தளம் பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான ராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications