உலகில் கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு.. உயிரிழப்பும் அதிகரிப்பு.. இந்தியாவில் நிலைமை மோசம்!
ஜெனிவா: உலக அளவில் கொரோனா தொற்றால் 3.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.76 கோடி பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 80,38,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,66,341 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 1000 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 3,67,34,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2,76,29,679 பேர் மீண்டுள்ளனர். தற்போது தற்போது கொரோனா பாதிப்புடன் 80,38,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே மிக அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 70,818 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,03,806 ஆக உயர்ந்துள்ளது. எனினும் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 78,31,418 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5,029,539 ஆகவும், ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 1,260,112 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,66,341 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் உலகிலேயே மிக அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1000 பேர் மரணம் அடைந்துள்ளனர். அண்மைக்காலமாக தொற்று பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 106,554 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அதே நேரம் உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்ககாவில் 217,661 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் 149,034 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் இதுவரை கொரோனா தொற்றால் 82,726 பேர் மரணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 42,592 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, அர்ஜெண்டினா, கொலம்பியா, நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதேபோல் பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உலகில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தை ஒப்பிட்டால் 3 லட்சம் பேருக்கு தினசரி பரவிய கொரோனா, தற்போது 3.43 லட்சம் பேருக்கு பரவுகிறது. இதேபோல் உயிரிழப்பும் தினசரி 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications