ஐ.நா.சபையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம்.. நடுநிலை வகித்தது இந்தியா!
ஜெனீவா: உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது. அதாவது தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 3ஆவது நாளாக போரிட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ படைகள் நுழைந்தது. தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைகிறார்கள்.
18 வயது- 60 வயதுக்குள்பட்ட ஆண்கள் உக்ரைனை விட்டு வெளியேறக் கூடாது என அரசு தெரிவித்துள்ளதால் அவர்களது உறவினர்கள் வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சமடைகிறார்கள்.

ரஷ்யா போர்
போரை நிறுத்த ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தும் உக்ரைன் மீதான போர் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் நேற்றைய தினம் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்தியா பேசியது என்ன
பாதுகாப்பு அம்சங்களில் இந்தியா, ரஷ்யாவை நம்பி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா எந்த முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த தீர்மானத்தின் மீது ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ். திருமூர்த்தி பேசினார். அவர் கூறுகையில் உக்ரைனில் நடைபெற்று பெரும் போர் குறித்து இந்தியா கவலை கொள்கிறது.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்த இந்திய
வன்முறைகளை உடனடியாக நிறுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மனித உயிர்களை பணயமாக வைத்து எந்த தீர்வையும் எட்டி விட முடியாது. ராஜாங்க ரீதியில் தீர்வு காண்பது என்பது கைவிடப்பட்டதால் இந்தியாவுக்கு வருத்தம் அளிக்கிறது. நாம் உடனடியாக அந்த தீர்வை எட்டுவதற்கு திரும்ப வேண்டும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என திருமூர்த்தி தெரிவித்தார். உக்ரைன்- ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இதனால்தான் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுத்து வந்த போதிலும் இந்தியா எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.

புதினுடன் பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பேச வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்தது. அதன்படி புதினுடன் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கூறி உக்ரைன் மீதான போரை நிறுத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications