இந்தியா உடனான உறவு.. வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் சொன்ன வார்த்தை.. இதுதான் ட்விஸ்ட்
டாக்கா: வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி வென்றுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்கிறார். இதற்கிடையே இந்தியா உடனான உறவுகளை எப்படிக் கையாள்வீர்கள் என்ற கேள்விக்கு அவர் முக்கிய பதிலை அளித்துள்ளார். சமீப காலமாக இந்தியா வங்கதேச உறவு மோசமான நிலையை எட்டிய சூழலில், தாரிக் ரஹ்மான் வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
வங்கதேசத்தில் ஹசீனா வெளியேற்றத்திற்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வந்தது. இதற்கிடையே அங்கு ஜனநாயக அடிப்படையில் புதிய அரசைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்கதேசத்தில் கடந்த 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.

வங்கதேசத் தேர்தல்
அதில் ஜென் ஜீ இளைஞர் கட்சியை பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) கட்சி வீழ்த்தியது. அங்கு மொத்தம் 299 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பிஎன்பி கூட்டணி 212 இடங்களில் வென்றுள்ளது. அதிலும் பின்பி கட்சி மட்டும் 209 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் 77 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஜமாத் கட்சி 68 இடங்களிலும், இளைஞர்களின் என்சிபி கட்சி 6 இடங்களை மட்டுமே வென்றன.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இதற்கிடையே அவரிடம் வங்கதேச வெளியுறவுக் கொள்கைகள் இனிமேல் எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நாட்டின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் வங்கதேச வெளியுறவுக் கொள்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா உடனான உறவு
இந்தியாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த தாரிக் ரஹ்மான், "வங்கதேசம் மற்றும் அதன் மக்களின் நலன்களே எங்கள் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும். சுதந்திரத்தை விரும்பும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் பிஎன்பிக்கு மீண்டும் வெற்றியைக் கொடுத்துள்ளனர்.. வெளியுறவுக் கொள்கை குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.. பங்களாதேஷ் மக்களின் நலன்களே முதன்மையானது. அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே எங்கள் கொள்கையை முடிவு செய்வோம்" என விளக்கினார்.
வங்கதேசத்திற்கு முக்கியத்துவம் என்ற இவரது கொள்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனான உறவுகளைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முகமது யூனுஸின் இடைக்கால அரசு இருந்த காலகட்டத்தில் இந்தியா வங்கதேச உறவு மோசமான நிலையில், இப்போது தாரிக் ரஹ்மான் வருகைக்குப் பிறகு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவுக் கொள்கை
சர்வதேச நாடுகளுடனான உறவை ரஹ்மான் அரசு எப்படிக் கையாளும் என்பது தொடர்பாக பி.என்.பி.யின் மூத்த தலைவர் அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌத்ரி விளக்கமளித்துள்ளார். அதில், தங்கள் அரசு பன்முக உறவுகளைக் கடைப்பிடிக்கும் என்றும், ஒரு குறிப்பிட்ட நாட்டை மையப்படுத்திய அணுகுமுறையைத் தவிர்க்கும் என்றும் கூறினார். இறையாண்மைப் பாதுகாப்பு, சுயாட்சி, பரஸ்பர மரியாதை ஆகியவை வெளியுறவு உறவுகளுக்கு முக்கியம் என்பதையும் பிஎன்பி தலைமை வலியுறுத்தியது.
இந்தியா நம்பிக்கை
ரஹ்மானின் சர்வதேச உறவுகளைக் கையாளும் மாயூன் கபீர், புதிய அரசில் முக்கிய அதிகாரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்போது இருக்கும் சூழலில் மக்களின் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதே முக்கியம் என்றார். அவர் மேலும், "உள்நாட்டில் முதலில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதன்பின் சர்வதேச உறவுகளில் தேவையான நடவடிக்கை எடுப்போம். இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் செல்வோம்" என்றார்.
இந்தியாவும் தாரிக்கின் வருகையை பாசிட்டிவாகவே பார்க்கிறது. வங்கதேசம் உடனான உறவில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்கச் சரியான தருணமாகக் கருதுகிறது. தாரிக் அரசின் மீது நம்பிக்கையுடன் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications