இந்தியா செய்தது தவறு.. பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.. பாக். அமைச்சர் கோபம்!
விதிகளை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவை திருப்பி தாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

இஸ்லாமாபாத்: விதிகளை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவை திருப்பி தாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இன்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்திய விமானப்படை இன்று அதிகாலை இந்த தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

என்ன பேட்டி
ஆலோசனைக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது. பாகிஸ்தான் நிலத்தை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் எல்லா விதிகளுக்கு புறம்பான நடவடிக்கை.

என்ன பதில்
பாகிஸ்தானின் எல்லையை தாண்டி உள்ளே வந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சுய பாதுகாப்பிற்காக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. இதற்காகத்தான் நாங்கள் அவசர சந்திப்பை நடத்தினோம்.

இதுதான் முடிவு
இந்த முடிவை நாங்கள் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்தோம். இந்தியா நடத்திய தாக்குதல் மீதான நடவடிக்கை குறித்து அவரிடம் பேசிய பின் முடிவு செய்வோம் என்று குரேஷி தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன?
ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி இப்படி கூறி இருக்கும் வேளையில், நேற்றுதான் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். எல்லை அருகே வந்து காஷ்மீரில் மக்கள் இருக்கும் பகுதி அருகே தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications