உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடு.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
லண்டன்: உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
லண்டனை தலைமையகமாகக் கொண்ட ஐஐஎஸ்எஸ் சர்வதேச நிறுவனம் ஒன்று உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவு செய்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
அதன்படி 2017ஆம் ஆண்டு உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புக்காக பட்ஜட்டில் எவ்வளவு நிதியை ஒதுக்கியது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதல் ஐந்து இடங்கள்
அதன்படி அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதல்முறையாக இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்கா முதலிடத்தில்
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா தனது பாதுகாப்புக்காக 602.8 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

சீனாவுக்கு இரண்டாவது இடம்
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா பாதுகாப்புக்காக 150.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு 3வது இடம்
இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்காக 76.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறது.

ரஷ்யாவுக்கு 4வது இடம்
நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யா தனது பாதுகாப்புக்காக 61.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்தியாவுக்கு 5வது இடம்
இந்தப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 52.5 பில்லியன் டாலர்களை இந்தியா தனது பாதுகாப்புக்காக செலவு செய்கிறது.

இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி
இந்தியா முதல்முறையாக இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 51.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால் இங்கிலாந்து தனது பாதுகாப்பு செலவை 52.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 50.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைத்துள்ளது.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications