உள்குத்து? சண்டைக்கு நடுவே மாலத்தீவு விரையும் சீன ஆராய்ச்சி கப்பல்! இந்தியாவுக்கு ஆபத்து? பரபர தகவல்
பெய்ஜிங்: இலங்கையில் நீடிக்கும் தடையால் சீன ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03 இந்தியாவிடம் மோதி வரும் மாலத்தீவு நோக்கி அது செல்கிறது. தற்போது சீனா-மாலத்தீவு இடையேயான உறவு என்பது மேம்பட்டு இருக்கும் சூழலில் இந்த கப்பலின் பயணம் என்பது இந்தியாவுக்கு ஆபத்தை தருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இலங்கை, சீனா, மாலத்தீவு உள்ளிட்டவை உள்ளன. தற்போதைய சூழலில் நிதி நெருக்கடியால் சிரமப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இதனால் இலங்கை இப்போது இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. மாறாக சீனா வழக்கம் போல் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.

அதேபோல் மாலத்தீவுக்கு இந்தியாவுக்கு பல உதவிகளை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடந்த அதிபர் தேர்தலில் சீனா ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றாார். இதையடுத்து லட்சத்தீவு சென்று பிரதமர் மோடி எக்ஸ் போட்டோவில் வெளியிட்ட போட்டோ, வீடியோ பெரிய அளவில் விவாதத்தை கிளம்பியது.
இந்த விவகாரத்தில் மாலத்தீவு-இந்தியா இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது. மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களை வெளியேறும்படி அந்தாடு தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைய சூழலில் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு சுமூகமானதாக இல்லை. இத்தகைய சூழலில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சீனா இந்தியாவுடன் எல்லைப்பகுதியில் அடிக்கடி மோதி வருகிறது. அதேபோல் கடல் வழியாகவும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையே தான் சீன ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03- எனும் கப்பல் இந்திய பெருங்கடலில் கடல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைவது என்பது இந்தியாவுக்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த கப்பலில் பல்வேறு தரவுகளை சேகரிப்பதற்கான நவீன கருவிகள் உள்ளன. இந்த கப்பலால் ஸ்னூப்பிங் செய்ய முடியும். இதுதான் பிரச்சனையாக உள்ளது. இதுபற்றி ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ட் எனும் கடல்சார் கண்காணிப்பு அமைப்பானது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சீனாவின் ஜியாங் யாங் ஹாங் 03 எனும் கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நுழைகிறது. இது மாலத்தீவின் மாலே நோக்கி செல்கிறது. இந்த இந்திய பெருங்கடலில் கடல் ஆராய்ச்சியில் அது ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு உள்ளது. இதையடுத்து இந்தியா கேட்டு கொண்டதன் பேரில்
இலங்கை்கு அடுத்த ஓராண்டுகள் வெளிநாடுகளின் ஆராய்ச்சி கப்பல்கள் செல்ல தடை விதித்து அந்நாடு அறிவித்தது. இந்த அறிவிப்பானது கடந்த ஆண்டு 2023 டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் சீனா கப்பலால் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதால் அந்த கப்பல் மாலத்தீவு நோக்கி செல்கிறது.
ஏற்கனவே இந்தியா-மாலத்தீவு இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே தான் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனா சென்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்தியர்கள் மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்ததால் சீனாவில் இருந்து அதிகமானவர்களை மாலத்தீவு அனுப்ப அவர் கோரிக்கை வைத்தார். மேலும் அவர்கள் இருநாடுகளின் உறவு உள்பட பல்வேறு விஷயங்களை விவாதித்தனர். மேலும் இந்த மாதம் இறுதியில் மாலத்தீவுக்கு இலங்கையின் சர்வதேச விவகாரத்துறை அமைச்சர் செல்ல உள்ளார்.
மேலும் உகாண்டாவில் அணிசேரா இயக்கத்தின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றம் மாலத்தீவின் பிரதிநிதியான மூசா ஜமீருடன் இருநாட்டு விவகாரங்கள் குறித்து பேசினார். இத்தகைய சூழலில் சீனாவின் ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03 மாலத்தீவு நோக்கி செல்வது இந்தியாவுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுபற்றி இந்திய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‛‛இது வழக்கமான ஒன்று தான்'' என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விஷயத்தில் இந்தியா விழிப்போடு இருக்கிறது. மாலத்தீவு மற்றும் சீனாவின் நடவடிக்கையையும், ஜியாங் யாங் ஹாங் 03 எனும் கப்பலின் செயல்பாட்டையும் இந்தியா தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.
முன்னதாக கடந்த 2023 ஏப்ரல் மாதம் இந்திய கடற்படை சார்பில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு சீனா குறித்த முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது சீனா 250 முதல் 250க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்களை கொண்டு உலகின் மிகப்பெரிய கடற்படையாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடு என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக 5 முதல் 9 ஆராய்ச்சி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இயங்கி வருகிறது. இது நம் பாதுகாப்பு விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கூறியிருந்தது நினைவில் வைக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications