"இந்தியா எங்களை தாக்க போகுது! இன்னொரு போருக்கு ரெடியாகிறது.." கதறிய பாகிஸ்தான் அதிபர்! என்ன மேட்டர்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடன் இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக பாக். அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த பேச்சில் அவர் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. வெறும் சில நாட்களே நீடித்த அந்த போரில் இந்தியா மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டு இருந்தது.

பாகிஸ்தான் அதிபர்
இதற்கிடையே பாகிஸ்தான் உடன் இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக அந்நாட்டின் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். போர்ச் சூழலைத் தவிர்த்து, இந்தியா பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த கருத்துகளை சர்தாரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியா இன்னொரு போருக்குத் தயாராவதாக அதன் தலைவர்கள் சொல்கிறார்கள். பிராந்திய அமைதியின் வாழ்நாள் ஆதரவாளனாக நான் இதை ஆதரிக்க மாட்டேன். பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் திறந்தே உள்ளது. போரைத் தவிர்த்து, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். இதுவே பிராந்தியப் பாதுகாப்புக்கான ஒரே வழி" என சர்தாரி வலியுறுத்தினார்.
புலம்பல்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை "நீர்த் தீவிரவாதம்" என்றும் அவர் சாடினார். அரசியல் ஆதாயத்திற்காக நீர் ஆதாரங்களைக் கூட இந்தியா ஆயுதமாக்குவதாகக் குற்றம் சாட்டினார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து தார்மீக ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் அமைதி தொடர சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆப்கான் விவகாரம்
ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குழுக்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையையும் சர்தாரி சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "இந்த தீவிரவாதிகளுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவர்களைக் கவனிக்காமல் நாம் புறக்கணித்தால் அது மற்றொரு பேரழிவு தாக்குதலுக்கே வழிவகுக்கும்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க பாகிஸ்தான் அனைத்து தூதரக வழிகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் மண் புனிதமானது. அண்டை நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்தி எங்கள் அமைதியைக் குலைக்க எந்த சக்தியையும் (உள்நாட்டு, வெளிநாட்டு) அனுமதிக்க மாட்டோம்.
தோஹா ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதிகளை மீறி ஆப்கான் மண்ணில் பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவதைத் தடுக்க தாலிபான் அரசு தவறவிட்டது.. இதுபோன்ற தீவிரவாத குழுக்களை உடனடியாக கலைக்க வேண்டும். தீவிரவாதிகள் வளர்ந்து, மற்ற நாடுகளில் அமைதியைக் குலைக்க ஆப்கான் காரணமாக இருந்துவிடக்கூடாது" என்றார்.
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் நடந்த மோதல்களையும் சர்தாரி கண்டித்தார். ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், 1967-க்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, அல்-குட்ஸ் அல் ஷரீப் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்குப் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் என சர்தாரி உறுதிப்படுத்தினார்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications