Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயந்து நடுங்கும் பாகிஸ்தான்.. போர் பதற்றத்தால் அதிரடி மாற்றத்தை கையிலெடுத்த அமைச்சரவை.. இதான் விஷயம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா கடும் தாக்குதலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்த நாட்டு உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். இதில், அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

India war Pakistan National Security Advisor

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என அந்த நாட்டு அமைச்சர்களே பதறி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி உள்ளதால் பாகிஸ்தான் பயந்து போயுள்ளது. பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்தியாவின் தாக்குதலில் இருந்து நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்த நாட்டு உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தானின் பத்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராவார்.

பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணி 2022 முதல் காலியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியிடத்திற்கான இடத்தை பாகிஸ்தான் நிரப்பியுள்ளது. அந்நாட்டின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ இன் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+