பாக்.கிற்கு ஒரு சொட்டு நீர் போகாது! 200 கிமீ கால்வாய் + 12 சுரங்கம்.. சிந்து நதியில் இந்தியா கேட்
இஸ்லாமாபாத்: நம் நாட்டை சீண்டி பார்க்கும் பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து நம் நாடு கதற விட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தானுக்கு சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட போகாமல் இருக்க மத்திய அரசு பெரிய பிளானை கையில் எடுத்துள்ளது. 200 கிலோமீட்டர் கால்வயில், 12 சுரங்கங்கள் அமைத்து சிந்து நதி நீரை கங்கையை நோக்கி திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வறண்டு பாலைவனமாகும். இந்த திட்டம் பற்றிய முக்கிய விவரங்கள் வருமாறு:
சிந்து நதி நீர்.. பாகிஸ்தானின் 22 கோடி மக்களின் வாழ்வதாரமே இதுதான். ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து பாகிஸ்தான் தன் தலையிலயே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தது.

இதில் பாகிஸ்தான் கதிகலங்கிப்போனது. அதுமட்டுமின்றி பயங்கராதிகளின் முகாம்கள் மட்டுமின்றி விமானதளங்கள், ராணுவ தளங்கள் நொறுக்கப்பட்டதால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. நாங்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்களை தாக்காதீங்க என்று பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சியதை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.
முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இந்த நதிநீர் என்பது தான் பாகிஸ்தானின் 22 கோடி மக்களின் வாழ்வாதாரம். குடிநீர், விவசாயம், மின்சார உற்பத்திக்கு இந்த தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நம் நாட்டிடம் இருந்து சிந்து நதியில் தண்ணீர் வழங்கப்படாததால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளது. பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தியதை திரும்ப பெற வேண்டும் என்று பாகிஸ்தான் கெஞ்ச தொடங்கியது.
முதலில் சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் ரத்த ஆறு ஓடும் என்று வாய்ச்சவடால் விட்ட பாகிஸ்தான் இப்போது உலக வங்கி மட்டுமின்றி அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. இந்தியாவிடம் இருந்து சிந்து நதி நீரை பெற்று தாருங்கள் என்று அழாத குறையாக கோரிக்கை வைக்கிறது. ஆனால் இப்போது வரை பாகிஸ்தானுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கதிகலங்கி போய் உள்ளது.
இந்நிலையில் தான் நம் நாடு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. எந்த காரணம் கொண்டு பாகிஸ்தானுக்கு சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு கூட செல்லக்கூடாது என்பது தான் அந்த திட்டம். மேலும் சிந்து நதி நீரை முழுவதுமாக நாமே பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் சாராம்சமாக உள்ளது.
அதன்படி மத்திய அரசு சிந்து நதியை நம் நாட்டில் ஓடும் ரவி-பியாஸ் நதிகளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சட்லஜ் நதி வழியாக பஞ்சாபில் உள்ள ஹரிகே தடுப்பணைக்கு தண்ணீரை கொண்ட வர முடியும். இதற்காக மெகா கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த கால்வாய்அமைக்கப்பட உள்ளது. இதில் 12 பெரிய சுரங்கப்பாதைளும் அடங்கும். சுரங்கப்பாதைகள் வழியாக ஓடும் நீர் இந்திரா காந்தி கால்வாயிலும், ராஜஸ்தானில் உள்ள கங்கை கால்வாய் உட்பட பிற கால்வாய்களுக்கும், இறுதியாக யமுனை நதியில் சென்று சேரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக கங்கை கால்வாயில் சகதிகளை அள்ளி ஆழப்படுத்தும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானாவில் உள்ள ஊட்டு கால்வாய்களில் (Feeder) இருந்து ஒரு சொட்டு நீர் கசிந்து பாகிஸ்தான் பக்கம் சென்று விடக்கூடாது என லீக்கேஜை முற்றிலுமாக தடுக்கும் வேலை நடக்கிறது.
இந்த மெகா பிளான் முழுமையாக அமலுக்கு வர இன்னும் 2 - 3 ஆண்டுகள் ஆகலாம். அப்படி வந்தால் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உத்தர பிரதேச மாநிலங்களில் நதி நீர் வளம் அதிகரிக்கும். பயிர்கள் செழித்து வளரும். யமுனையின் பல வறண்ட கிளைகளில் புது வெள்ளம் பாயும். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். ஏனென்றால் பாகிஸ்தான் தனது குடிநீர் மட்டுமின்றி விவசாயம், நீர் மின் உற்பத்திக்கு இந்த தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறது. இதனால் சிந்து நதி நீரை வைத்து பாகிஸ்தானுக்கு பெரிய செக்கை வைத்துள்ளது இந்தியா.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!











Click it and Unblock the Notifications