இந்தியாவிடம் கெஞ்சிய துருக்கி.. பாகிஸ்தானுக்கு எர்டோகன் ஆதரவு தெரிவிப்பது ஏன்? இந்த கதை தெரியுமா?
அங்காரா: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு தெரிவித்தது. தற்போது துருக்கியை நம் நாட்டு வர்த்தகர்கள், மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் துருக்கி நம்மிடம் தோரியம் டெக்னாலஜியை கேட்டு கெஞ்சி கூத்தாடிய சம்பவம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி.. நம் நாட்டின் எதிரி நாடாக மாறி உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் தோஸ்தான துருக்கி காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த மாதம் 7ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தானுக்குள் ஏவுகணை தாக்குதல்களை நம் நாடு நடத்தியது. துல்லிய தாக்குதல் வழியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் விமானதளம், ராணுவ தளமும் அழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை துருக்கி கண்டித்தது. பாகிஸ்தானின் நட்பு நாடு என்ற முறையில் நம்மை சீண்டியது.
அதுமட்டுமின்றி நம்மை தாக்க பாகிஸ்தானுக்கு உதவியது துருக்கி. பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நம்மை தாக்க முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டாலும் கூட அதன் பின்னணியில் துருக்கி இருந்தது. துருக்கி தனது நாட்டு ட்ரோன்களையும், ட்ரோன் ஆபரேட்டர்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அவர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து கொண்டு ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டனர். ஆனால் நம் நாடு ட்ரோன்களை அழித்து பாகிஸ்தான் - துருக்கியை கதறவிட்டது.
இந்த துரோகத்தால் நம் நாட்டு மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி துருக்கி உடனான வர்த்தக உறவையும் வர்த்தகர்கள் கைவிட்டுள்ளனர். நம் நாட்டின் விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் துருக்கி ஏர்லைன்ஸின் 2 போயிங் விமானங்களை இண்டிகோ நிறுவனம் 3 மாதம் மட்டுமே இயக்க வேண்டும். அதன்பிறகு நீட்டிப்பு வழங்கப்படாது என்று விமான இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இப்படி துருக்கிக்கு எதிராக நம் நாடு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி எதற்காக பாகிஸ்தானை அதிகரிக்கிறது. துருக்கி நம் நாட்டுக்கு எதிராக திரும்பியது ஏன்? என்பதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி அதிபராக ரெசேப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர் இஸ்லாமிய நாடுகளின் தலைவராக மாற நினைக்கிறார். இதனால் இஸ்லாமிய நாடுகளுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறார். அந்த வகையில் தான் பாகிஸ்தான் நாட்டுடன் நெருக்கமான உறவை பின்பற்றி வருகிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும் கூட இன்னொரு விஷயமும் உள்ளது. தற்போது உலக நாடுகளை எடுத்து கொண்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. துருக்கியிடம் அணுஆயுதம் இல்லை.
இந்நிலையில் தான் துருக்கி நம் நாட்டிடம் கெஞ்சி கூத்தாடிய சம்பவம் நடந்துள்ளது. துருக்கியை எடுத்து கொண்டால் எரிசக்தி துறையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. அதேபோல் அணுஆயுதம் தயாரிக்க வேண்டும் என்பதையும் துருக்கி விரும்புகிறது. இது இரண்டும் துருக்கிக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. துருக்கியிடம் ஏராளமாக தோரியம் உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரம் டன் அளவுக்கு தோரியத்தை துருக்கி வைத்துள்ளது. ஆனால் தோரியத்தில் இருந்து எரிசக்தி தயாரிப்பது மற்றும் அணுஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் துருக்கியிடம் இல்லை.
ஆனால் நம் நாட்டை எடுத்து கொண்டால் அந்த தொழில்நுட்பத்தில் கலக்கி வருகிறது. பொதுவாக அணுமின் நிலையத்தில் யுரேனியம் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுரேனியம் கதிரியக்க தன்மை கொண்ட தனிமமாகும். இதனால் தான் மின்சாரம் தயாரிப்புக்கும், அணுஆயுதத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அணுஆயுதம் தயாரிப்புக்கும் யுரேனியம் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. யுரேனியம் என்பது எல்லா நாடுகளிலும் கிடைப்பது இல்லை. கஜகஜஸ்தான், கனடா, நமீபியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் தான் அதிகமாக யுரேனியம் உள்ளது. இதனால் அந்த நாடுகளிடம் இருந்து நமக்கு தேவையான யுரேனியத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இல்லாவிட்டால் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும்.
இந்த 2 பிரச்சனைகளால் நம் நாடு முன்கூட்டியே மாற்றி யோசித்தது. நம் நாட்டின் மறைந்த விஞ்ஞானியும், அணுசக்தி திட்டத்தின் தந்தையுமான ஹோமி ஜஹாங்கீர் பாபா மாற்று யோசனையை கையில் எடுத்தார். நம் நாட்டில் தோரியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் தோரியம் அதிகம் இருக்கிறது. கேரளா, தமி்நாடு, ஒடிசா மாநிலங்களில் தோரியம் அதிகம் உள்ளது. தோரியமும், யுரேனியத்தை போல் கதிரியக்க தன்மை கொண்டது. இதனால் யுரேனியத்துக்கு பதில் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.
தோரியம் - 232 தனிமத்தை நியூட்ரான் உதவியுடன் யுரேனியம் 233 ஆக மாற்றலாம். அதன்பிறகு அந்த யுரேனியத்தை வைத்து அணுசக்தி நிலையங்களில் மின்சாரமும், அணுஆயுதமும் தயாரிக்கலாம். தோரியத்தை எடுத்து கொண்டால் அது மிகவும் பாதுகாப்பான அணு எரிபொருளாகும். துருக்கியிடம் இந்த தொழில்நுட்பம் இல்லை. ஆனால் தோரியம் கொட்டி கிடக்கிறது.
இதனால் துருக்கி அதிபர் எர்டோகன் தோரியம் தொழில்நுட்பத்தை நம்மிடம் இருந்து பெற நினைத்தார். இதற்காக கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து தோரியத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து அவர் கேட்டார். ஆனால் நம் நாடு தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. இது எர்டோகனுக்கு நம் நாட்டின் மீதான எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் துருக்கியை எடுத்து கொண்டால் எரிசக்தி துறையில் மிகவும் பின்தங்கி உள்ளது.
அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரம், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றில் 4ல் 3 பங்கை இறக்குமதி செய்து தான் துருக்கி யூஸ் செய்கிறது. இது துருக்கிக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. தற்போது ஆண்டுதோறும் அதற்கான செலவு என்பது அதிகரித்து வருவதால் அவ்வப்போது துருக்கி பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி வருகிறது.
இதற்கிடையே தான் நம் நாடு தோரியம் டெக்னாலஜியை துருக்கிக்கு கொடுக்கும்போது அதன்மூலம் மின்சார தேவையை துருக்கியால் எளிதாக பூர்த்தி செய்ய முடியும். நம் டெக்னாலஜியை பயன்படுத்தி தோரியத்தை வைத்து மின்சாரம் மட்டுமின்றி அணுஆயுதமும் துருக்கியால் தயாரிக்க முடியும். ஆனால் எர்டோகனுக்கு நம் நாடு தோரியம் தொழில்நுட்பத்தை வழங்கவில்லை.இதுவும் துருக்கி அதிபர் எர்டோகன் நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க முக்கிய காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக் -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்! -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம்












Click it and Unblock the Notifications