மிஸ் ஆசியா பசிபிக் அழகி போட்டி: 2வது ஆண்டாக பட்டம் வென்ற இந்தியா

Subscribe to Oneindia Tamil

பூசான்: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய அழகிக்கு மிஸ் ஆசியா பசிபிக் அழகி பட்டம் கிடைத்துள்ளது.

மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கொரியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிஸ் இந்திய ரன்னர் அப் ஷ்ரிஷ்டி ராணா(21) கலந்து கொண்டார். இந்த போட்டியில் மொத்தம் 49 அழகிகள் கலந்து கொண்டனர்.

தென் கொரியாவில் உள்ள பூசானில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது.

இந்தியாவுக்கு பட்டம்

இந்தியாவுக்கு பட்டம்

இறுதிப் போட்டியில் இந்திய அழகி ஷ்ரிஷ்டி ராணா மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றார்.

இரண்டாவது ஆண்டாக

இரண்டாவது ஆண்டாக

கடந்த ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் அழகியாக இந்திய அழகி ஹிமாங்கினி சிங் யடு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டத்தை இந்திய அழகி வென்றுள்ளார்.

சிறந்த தேசிய உடை

சிறந்த தேசிய உடை

நம் தேசியப் பறவையான மயில் போன்று உடை அணிந்து வந்த ராணாவுக்கு சிறந்த தேசிய ஆடை விருது கிடைத்தது. அவருக்கு அழகிப் பட்டத்திற்கான கிரீடத்தை ஹிமாங்கினி சூட்டினார்.

ஜீனத் அமன், தியா மிர்சா

ஜீனத் அமன், தியா மிர்சா

முன்னதாக மிஸ் ஆசியா பசிபிக் அழகி பட்டத்தை 1970ம் ஆண்டு மிஸ் ஜீனத் அமனும், 2000ம் ஆண்டு தியா மிர்சாவும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+