இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே!
கொழும்பு: நேற்று முன்தினம் அதிகாலை, இந்திய பெருங்கடல் பகுதியில் சைலண்டாக அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்திருந்தது. இது, இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய பெருங்கடலுக்கு வந்த ஈரானிய போர் கப்பலை தாக்கி அழித்தது. இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம், இலங்கையின் மூவ் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது.

என்ன நடந்தது?
இந்தியாவிலிருந்து சில ஆயிரம் கி.மீ தூரத்தில் எங்கோ போர் நடந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மார்ச்.4ம் தேதியன்று நடந்த தாக்குதல், ஈரானிலிருந்து 3,200 கி.மீ தொலைவில், கன்னியாகுமரியிலிருந்து வெறும் 350 கி.மீ தொலைவில் நடந்திருக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
1. இந்தியாவின் அழைப்பின் பேரில்தான், ஈரான் தனது 'ஐரிஸ் டெனா' எனும் போர் கப்பலை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது.
ஈரான் கப்பல் மீது தாக்குல்
இந்தியா ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச அளவில் கடற்படை பயிற்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்கதான் 'ஐரிஸ் டெனா' கடந்த மாதம் விசாகப்பட்டினத்திற்கு வந்திருந்தது. இந்த கப்பலில் இருந்த மாலுமிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த கப்பலைதான் அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. கப்பலில் இருந்த மாலுமிகளில் 82 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
2. இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் என்று, இந்தியா தொடர்ந்து தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், வெறும் 350 கி.மீ தொலைவில் நடந்த தாக்குதல் இந்தியாவுக்கு தெரியவில்லையா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மத்திய அரசுக்கு சிக்கல்
இந்தியாவுக்கு தெரியாமல் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவில்லை எனில், இந்தியாவின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் வெடிக்கும். ஒருவேளை விஷயம் தெரிந்திருக்கிறது எனில், நட்பு நாடான ஈரானிடம் ஏன் இதனை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழும். இது இந்தியாவின் சர்வதேச உறவுகளை டேமேஜ் செய்யும். ஆக இந்த விஷயத்தில் மத்திய அரசு, புலி வாலை பிடித்த கதையாக சிக்கியிருக்கிறது.
இலங்கையின் உதவி
விஷயம் சீரியஸாவதை உணர்ந்த ஈரான், தனது மற்றொரு போர் கப்பலுக்கு, தஞ்சமளிக்க வேண்டும் என்று இலங்கையிடம் கேட்க, இலங்கையும் ஓகே சொல்லிவிட்டது. இப்போது அந்த இரண்டாவது கப்பல் திரிகோணமலையில் பாதுகாப்பாக இருக்கிறது. அதில் உள்ள வீரர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள். மனிதாபிமான விஷயத்திற்கு முன்னுரிமை கொடுத்து நாங்கள் ஈரான் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் என்று இலங்கை கூறியிருக்கிறது.
இந்தியாவுக்கான வாய்ப்பு
இலங்கையின் இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது. நியாயப்படி பார்த்தால், இந்தியாதான் இதை செய்திருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை மோடி சந்தித்ததாக இருக்கட்டும், ஈரான் தலைவர் காமேனியின் மரணத்திற்கு லேட்டாக ரியாக்ஷன் செய்ததாக இருக்கட்டும், ஈரான் விஷயத்தில் மத்திய அரசு செய்தது எல்லாமே சொதப்பலாக இருக்கிறது. எனவே இந்தியாவுக்கான நற்பெயரை தற்போது இலங்கை தட்டி சென்றிருக்கிறது.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன?












Click it and Unblock the Notifications