எதுவும் நடக்க கூடாது.. இந்தியா அனுப்பிய உளவு டிரோன் விமானங்கள்.. லடாக் எல்லையில் தீவிர சோதனை!
இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.
பெய்ஜிங்: இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.
இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லடாக் எல்லையில் இரண்டு நாட்டு படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் இருந்தது. கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்த மோதல் நீடித்து வருகிறது.
இதை தீர்க்கும் வகையில் இன்று லடாக்கில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு நாடுகளை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.

முடியும் வாய்ப்பு
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்தியா சார்பாக உயர் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். அவருடன் இன்னும் 6 அதிகாரிகள் உடன் செல்கிறார்கள். இந்த மீட்டிங் மூலம் எல்லை பிரச்சனையில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அவசியம்
மிகவும் பரபரப்பாக இருக்கும் லடாக் எல்லையில் இந்தியாவின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் செல்வது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன தவறு கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் எல்லையில் மிக தீவிரமான ரோந்து பணிகளை செய்து வருகிறார்கள்.

டிரோன் விமானம்
இந்த நிலையில் எல்லையில் தற்போது டிரோன் விமானங்களை இந்தியா பறக்கவிட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் ஏதாவது ஊடுருவல் இருக்கிறது. சீன வீரர்கள் எங்காவது குவிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதி நவீன கேமரா கொண்ட சிறிய ரக டிரோன் விமானங்கள் ஆகும் இது. இதன் மூலம் புகைப்படங்கள் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.
Recommended Video

ரேடார்
ரேடாரில் சிக்காமல் இந்த டிரோன்கள் தாழ்வாக பறந்து சென்று புகைப்படங்களை எடுக்கும். இரவிலும் கூட இந்த டிரோன் விமானங்கள் உளவு பணிகளை செய்யும். இதில் இருக்கும் டெம்பரேச்சர் சென்சார் மூலம் இரவில் உளவு பணிகளை செய்ய முடியும். வீரர்கள் ஊடுருவலை எளிதாக கண்டுபிடிக்க முடியும். எல்லையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்க கூடாது என்று இந்தியா இப்படி ரோந்து பணிகளை செய்து வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications