எல்லாம் சுயநலம்.. அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது.. சீன ஊடகம் அட்வைஸ்!
பெய்ஜிங்: அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது என சீன அரசின் ஊடகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா- சீனா- பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்திய எல்லையில் ஊடுருவி இந்தியாவின் கோபத்தை சீண்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி முதல் பாங்கோ சோ ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்த போது இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

இரு நாடுகள்
இதுகுறித்து இரு தரப்பு ராணுவத்தினரும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது தலையங்கத்தில் கூறுகையில் இருநாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு எல்லை பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது, நட்புறவுடன் நடந்து கொள்வது ஆகியவற்றை சீனா தனது நாட்டு கொள்கையாகவே வைத்துள்ளது.

இந்தியா
இந்த நிலையில் அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது. அமெரிக்கா எப்போதும் தனது நாட்டின் நலனுக்காக முயற்சிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. இரு நாடுகளை அதன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது.

முட்டாள்
இந்தியா- சீனா எல்லை பிரச்சினையில் தங்களால் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என அமெரிக்கா காத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. எனவே அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் காட்டும் நட்புறவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

காரணம்
இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க சீனா விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அண்டை நாடுகளுடன் சுமூக நட்புறவை பேணுவது என்பதே சீனாவின் அடிப்படை கொள்கையாகும். இந்தியாவை எதிரியாக்க எங்களிடம் எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications