முதலில் உங்க முதுகை பாருங்க! வாயை விட்ட வங்கதேசம்! லெஃப் ஹேண்டில் டீல் செய்த இந்தியா! என்னாச்சு?
டெல்லி: மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அதுகுறித்து அண்டை நாடான வங்கதேசம் தெரிவித்திருந்தது. அதாவது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்த நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்வினை ஆற்றி இருக்கிறது. முதலில் உங்கள் நாட்டில் சிறுபான்மையரை பாதுகாக்க வேண்டும் என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மத்திய அரசு பல்வேறு புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. அந்த வகையில் கடும் எதிர்ப்புக்கிடையே நள்ளிரவில் வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அது நாடு முழுவதும் சட்டமாகி அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத்தில் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம் கலவரமாக மாறியது. பல இடங்களில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. கடைகளும் சூறையாடப்பட்டன. பலர் தங்கள் பகுதியிலேயே அகதிகளாக வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. வன்முறையை தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.
அதே நேரத்தில் நடந்த வன்முறைக்கு காரணம் வங்கதேசத்தில் இருந்து வந்த சிலர் தான் எனவும், எல்லையை பாதுகாப்பது எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் வேலை மாநில அரசின் வேலை இல்லை. அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் என பதிலடி கொடுத்திருந்தார்.
இதனிடையே கலவரம் தொடர்பாக இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் கருத்து தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தரப்பிலிருந்து பேசிய செய்தி தொடர்பாளர்," இந்தியாவின் மேற்கு வங்கத்தில் முர்சிதாபாத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் தங்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்
இந்த நிலையில் முர்சிதாபாத் கலவரம் தொடர்பான வங்க தேசத்தின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர் வினை ஆற்றியுள்ளது. வங்கதேசத்தின் கருத்தை நிராகரிப்பதோடு இந்த தேவையற்ற கருத்து எனவும், வங்கதேசம் முதலில் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மேற்கு வந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது.
இது ஒரு கபட முயற்சி வங்கதேசத்தில் அங்குள்ள சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படும் நிலையில் இந்தியா தனது கவலையை கூறியிருந்தது. அதற்கு இணையாக வங்கதேசம் இந்த ஒரு விஷயத்தை எடுத்து வைத்துள்ளது. ஆனால் அங்கு வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடைமுறையாக நடமாடி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. வங்க தேசம் தனது எல்லையை புரிந்து கொள்ள வேண்டும்" என பதிலடி கொடுத்துள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications