ஊடகம், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் தீர்மானம்.. ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கையெழுத்து
பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பத்திரிகை, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 2022 உறுதியான ஜனநாயக அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார்.
Recommended Video
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஜி7 நாடுகள் மற்றும் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் கலந்துகொள்வது வழக்கம்.

ஜி7 மாநாடு
அந்த வகையில் ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்காக கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் "2022 உறுதியான ஜனநாயக அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக பாதுகாப்பு அறிக்கை
இந்த 4 பக்க அறிக்கையில், 'ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்த்து நிற்கும் ஜனநாயக பாதுகாவலர்களை வாழ்த்துகிறோம். உலகளவில் ஜனநாயக சக்திகள் மேம்பட சர்வதேச அளவில் ஒத்துழைப்பை வழங்கும் பணிகளை தொடங்குவோம். நேரடியாகவும், இணையதள வாயிலாகவும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்போம்.

தகவல் உரிமை
ஜனநாயகத்தில் வெளிப்படையான விவாதங்களும், சுதந்திரமான பன்மைத்துவ ஊடகமும் அடங்கும். அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படைத் தன்மையோடும், பொறுப்புணர்வுடனும் ஆன்லைனிலும், வெளியிலும் பொதுமக்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கிடைக்க வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம்
சுதந்திரமாக ஊடகங்கள் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டும். தடையற்ற, பாதுகாப்பான, இலவச இணையதள சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும். சைபர் குற்றங்கள் இல்லாத டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதுடன், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

மனித உரிமை
மனித உரிமை ஆர்வலர்கள், ஊழல்களை அம்பலப்படுத்துபவர்களை பாதுகாக்க வேண்டும்." என்பன போன்ற பல தீர்மானங்கள் அதில் உள்ளன. இந்த அறிக்கையை ஜெர்மனி, அர்ஜெண்டினா, கனடா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், செனெகல், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கூட்டாக வெளியிட்டு உள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications