தென்சீன கடல் விவகாரம்... சீனாவுக்கு எதிராக கை கோர்த்த யு.எஸ்., இந்தியா, ஜப்பான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தென்சீன கடல் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் கை கோர்த்துள்ளன. இந்த கடல் பகுதி விவகாரத்தில் இணைந்து செயல்படுவது என அமெரிக்காவில் நடைபெற்ற 3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருங்கடலின் ஒருபகுதியாக தென்சீனக் கடல் உள்ளது. தென்னாசிய நாடுகளின் போக்குவரத்துக்கு இந்த கடல்பரப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

India, US, Japan join hands against China on South China sea row

இந்த தென்சீன கடல் பரப்பு முழுவதுமே தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அப்பகுதி நாடுகளான தைவான், வியட்நாம், புருனே, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தென்சீன கடல் பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன.

வியட்நாமுக்கு சொந்தமான தென்சீனக் கடல் பகுதியில் இந்தியாவின் ஓ.என்.ஜி. நிறுவனம் எண்ணெய் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவும் ஆதரவாக உள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபியூமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்ற 3 நாடுகளின் முதலாவது கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கிழக்கை நோக்கி என்ற கொள்கையின் அடிப்படையில், ஆசியான் நாடுகள் உள்பட பொருளாதாரரீதியாக வளர்ந்துவரும் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், அந்நாடுகளுடனான அரசியல், பாதுகாப்புரீதியான நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தியா விரும்புகிறது.

ஒருங்கிணைந்து செயல்பட ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் சில நாடுகள் விரைவில் உறுப்பினராக சேர வேண்டும். இந்திய-பசுபிக் கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். சர்வதேசக் கடல் பகுதிகளில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றார்.

இதன் பின்னர் 3 நாடுகள் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய - பசுபிக் கடல் பகுதி விவகாரங்களில் 3 நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து வலியுறுத்தப்பட்டது. தென் சீனக் கடல் உள்பட இந்திய-பசுபிக் பிராந்தியப் பகுதியில் சர்வதேச சட்டங்களை கடைப்பிடித்தல், தடையற்ற வர்த்தகம் மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ளுதல், பல்வேறு விவகாரங்களில் சுமூகமான முறையில் தீர்வு காணுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+