Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India US Trade Deal: “இந்தியா கேட்” படத்தை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.. வாஷிங்டனில் அதிரடி திட்டம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் படத்தைப் பகிர்ந்து 'இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை ஒட்டி வாஷிங்டனில் பிரமாண்டமான வெற்றி வளைவை அமைக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இந்தியா மீதான வரியை குறைப்பதற்கு முன்னதாக டிரம்பின் சமூக ஊடக பக்கத்தில் இந்தியா கேட் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

India US Trade Deal

தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் 1921 போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் படத்துடன் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "இந்தியாவின் அழகான வெற்றி வளைவு, நம்முடையது எல்லாவற்றிலும் மிகப்பெரியதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் டி.சி.யில் ஒரு வெற்றி வளைவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அது உலகிலேயே மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இவ்வாறு பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வாஷிங்டன், டி.சியில் மிகப்பெரிய வெற்றி வளைவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அமெரிக்க தலைநகரில் அதுபோன்ற ஒன்று இல்லாதது அசாதாரணமானது என்றும் கூறி இருந்தார்.

"உலகம் முழுவதும் 57 நகரங்களில் இதுபோன்ற வெற்றிச் சின்னங்கள் உள்ளன. ஆனால், வாஷிங்டன், டி.சியில் அப்படி ஒன்று இல்லை. அது எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த நாடு." எனத் தெரிவித்திருந்தார் டிரம்ப்.

ஜூலை 4, 2026 அன்று அமெரிக்காவின் 250 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த வளைவு இருக்கும் என்று டிரம்ப் முன்னதாகவே சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த நினைவுச்சின்னம் நிரந்தர அமைப்பாக இருக்கும்.

இந்த நினைவுச்சின்னம், தலைநகரின் மிகவும் பிரபலமான அடையாளங்கள் பலவற்றை விட உயரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, வெள்ளை மாளிகை சுமார் 70 அடி உயரத்திலும், ஆபிரகாம் லிங்கன் நினைவுச்சின்னம் சுமார் 100 அடி உயரத்திலும் உள்ளது.

டிரம்ப் அமைக்க விரும்பும் புதிய வளைவு லிங்கன் நினைவுச் சின்னத்திற்கும் ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கும் இடையிலான ஒரு இடத்தில், நகரின் வானலைகளை வியத்தகு முறையில் மாற்றும் மற்றும் வாஷிங்டன் டிசியின் முக்கிய அம்சமாக மாறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+