கவனமாக இருங்க! முன்பே ரெடியான அமெரிக்காவின் எஃப்பிஐ.. கனடா - இந்தியா மோதல் பற்றி பரபர வார்னிங்!
ஓட்டவா: இந்தியா கனடா இடையிலான உறவு மோதல் தற்போது சர்வதேச விவகாரமாக மாறி உள்ளது. இரண்டு நாட்டு விவகாரத்தில் தற்போது அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் தலையிட தொடங்கி உள்ளது.
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.

உளவு தகவல்: இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு மேற்கொண்ட உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது. மனித உளவு மற்றும் சிக்னல் மூலம் மேற்கொள்ளப்பட்ட உளவு வழியாகவே இந்த குற்றச்சாட்டை கனடா வைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது மனிதர்கள் வழியாக வழங்கப்பட்ட உளவு தகவல், சில சிகனல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்த தகவல்களை கண்டறிந்ததாக கனடா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிக்னல் என்றால் போன் பரிமாற்றம், மெயில் பரிமாற்றம், போனை ஒட்டுகேப்பது போன்ற உளவு பணிகள்.ஆகும் அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாம்.
இதிலும் இந்தியாவிற்கு எதிரான தகவல் அடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் காரணமாகவே சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார்.
யார் இந்த குழு?: இந்தியா கனடா மோதலில் ஃபை ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.
ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு தொடர்பான அமைப்பு ஆகும். முதலில் அமேரிக்கா - ஐரோப்பா இடையிலான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் யுனைடெட் கிங்டம்-யுனைடெட் ஸ்டேட்ஸ் கம்யூனிகேஷன் இன்டலிஜென்ஸ் ஆக்ட் (UKUSA) ஒப்பந்தம் என்று இது அழைக்கப்பட்டு அதன்பின் மற்ற 3 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டது.
இந்த சர்வதேச நாடுகள்தான் இந்தியாவை கண்காணிக்க தொடங்கி உள்ளதாம்.
காலிஸ்தான் தீவிரவாதி: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டதே அமெரிக்காவின் எஃப்பிஐ கனடாவில் இருக்கும் சீக்கியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாம்.
அதாவது உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று எஃப்பிஐ ஏஜெண்ட்டுகள் கனடாவில் இருக்கும் சீக்கியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாம். கடந்த ஜூன், ஜூலை முழுக்க இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
யார் இவர்? 1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்தியாவில் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஜஸ்டின் ட்ரூடோவிடம் தேடப்படும் நபர்களின் பட்டியல் அளித்தார். அதில் நிஜ்ஜாரின் பெயரும் இருந்தது.
ஆனால் தொடர்ந்து கனடா அரசு நிஜ்ஜாருக்கு ஆதரவாக இருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்புவது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்ட நிஜ்ஜாரை நாடு கடத்துமாறு பஞ்சாப் காவல்துறை கோரியது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானா நகரில் 6 பேர் கொல்லப்பட்ட மற்றும் 42 பேர் காயமடைந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில்தான் இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில்தான் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்
கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்ட்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த திடீர் மோதலால் இந்திய தூதர்களில் ஒருவரை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.
கனடா பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம், அதை கடுமையாக நிராகரிக்கிறோம். கனடாவில் எந்த வன்முறைச் செயலிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் தவறானது... நாங்கள் ஒரு ஜனநாயகவாதிகள். இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது, என்று இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தில்.தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications