உங்களை எப்படி நாங்க மறப்போம்... ரஷ்யாவில் உருகிய மன்மோகன் சிங்

ரஷ்யா சென்றுள்ள மன்மோகன் சிங், மாஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான கழகத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவை புகழ்ந்து பேசினார்.
அவர் கூறுகையில், சர்வதேச சவால்களின்போது எப்போதுமே இந்தியாவுக்கு்த் துணை நின்றுள்ளது ரஷ்யா. இந்தியாவுக்கு நெருக்கடி நேரிட்டபோதெல்லாம் ரஷ்யா துணை நின்றுள்ளது. இந்த நட்பை இந்தியா ஒருபோதும் மறவாது.
எங்களுக்கு நண்பர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ரஷ்யா உற்ற துணைவனாக இருந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக ரஷ்யா செய்த உதவிகளை இந்தியர்கள் மறக்க மாட்டார்கள்.
இந்தக் காரணங்களுக்காகவே இந்தியர்கள், ரஷ்யாவின் நட்பை மதித்து வருகின்றனர். இந்திய, ரஷ்ய நட்பு மதிப்பு வாய்ந்தது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும்மேலாக ரஷ்யாவுடன் இந்திய நட்பு நீடித்து வருகிறது. வேறு எந்த ஒரு நாட்டுடனும் இந்தியாவுக்கு இப்படிப்பட்ட நீண்ட நெடிய நட்பு இருந்ததில்லை. உலக அளவில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே இப்படிப்பட்ட நட்பு இருந்ததில்லை. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பனாக ரஷ்யா விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரஷ்யாவின் ஆதரவால் பெரும் பலன்களை அடைந்துள்ளது இந்தியா. தேசிய வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்கு மறக்க முடியாதது. மின்துறை, தொழில்துறை, விண்வெளியியல், பாதுகாப்பு என இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்கு பெரியது என்றார் பிரதமர்.
பிரதமருக்கு இந்தக் கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தையும் நிகழ்ச்சியின்போது அளித்துக் கெளரவித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications