ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பற்றி திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் 3 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த திண்டுக்கல் இல்லத்தில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அந்தோணி மற்றும் மரியதங்கம் தம்பதியரின் மகன் அலெக்ஸிஸ் பிரேம்குமார் .

அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று அகதிகளின் குழந்தைகளுக்கான கல்விப் பணியை மேற்கொண்டு வந்தார்.

மறுவாழ்வு அமைப்பு:

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்கான பணியை மேற்கொள்ள ஏசு சபையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட அலெக்ஸிஸ்:

இந்நிலையில் பிப்ரவரி மாதம் சகோதரி சகாயசெல்வியின் வீட்டு விசேஷத்துக்கு வந்த அவர், மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகருக்குத் திரும்பி உள்ளார். கடைசியாக சகோதரர் மனோகரனுடன் ஜூன் 1 ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஜூன் 2 ஆம் தேதி அவர் கடத்தப்பட்டார்.

அகதிகள் இல்ல இயக்குநர்:

பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் கடத்தப்பட்டது குறித்து திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் டொமினிக், செய்தியாளர்களிடம், "கடத்தப்பட்ட அலெக்ஸிஸ் பிரேம்குமார் கடந்த 2005 முதல் 2010 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

அறக்கட்டளை அமைப்பு:

ஜெ.ஆர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதனை சர்வதேச அமைப்பாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போரில் பாதிக்கப்பட்டவர்கள்:

அங்கு போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

பார்வையிடச் சென்றவர்:

அங்கு ஹெராத் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சோகாதத் கிராமத்தில் போர் அகதிகளின் குழந்தைகளுக்காக ஏசு சபையின் சார்பில் நடத்தப்படுகிற பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக கடந்த 2 ஆம் தேதி அலெக்ஸிஸ் பிரேம் குமார், ஆசிரியர்களுடன் சென்றார். அந்தப் பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டு விட்டு, அங்கிருந்து அவர் திரும்புவதற்கு தயார் ஆனார்.

தீவிரவாதிகள் கடத்தல்:

அப்போது அங்கே துப்பாக்கி ஏந்தி வந்த தீவிரவாதிகள், கண் இமைக்கும் நேரத்தில் அலெக்ஸிஸ் பிரேம் குமாரை கடத்திச்சென்றனர்.

சிறப்பு பிரார்த்தனைகள்:

தீவிரவாதிகளால் அவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்ததும் பெஸ்கி இல்லத்தைச் சேர்ந்த அனைவரும் கவலை அடைந்துள்ளோம். அவருக்காக சிறப்புப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

போலீஸார் விசாரணை:

இதனிடையே பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் தங்கியிருந்த பெஸ்கி இல்லத்தில் திண்டுக்கல் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வனிதா, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+