எவரெஸ்டில் ஏறியதாக பொய் சொன்ன இந்திய தம்பதி: 10 ஆண்டுகள் தடை விதித்தது நேபாளம்
காத்மாண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்-தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக புகைப்படம் எடுத்து நேபாள அரசிடம் சமர்ப்பித்தனர்.

இந்த புகைப்படத்தை உண்மையென்று நம்பிய நேபாள அரசு தம்பதியர் மலையேறியதாக சான்றிதழ் அளித்தது. ஆனால், 'அவை, கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள்' என, சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர்;
இதைத்தொடர்ந்து விசாரணை செய்த நேபாள சுற்றுலாத் துறை, இருவரின் மலையேறும் புகைப்படமும் போலியானது என்பதைக் கண்டறிந்தது. அத்துடன், அந்த தம்பதியர் மலையேறிய சான்றிதழை ரத்து செய்ததுடன், 10 ஆண்டுகள் இருவரும் மலையேறத் தடை விதித்துள்ளது.
இதுபற்றி நேபாள சுற்றுலாத்துறையின் தலைவர் சுதர்சன் பிரசாத் தக்கல் கூறும்போது, 'இந்திய தம்பதிகள் இருவரும் வேறு ஒரு இந்திய தம்பதியினரின் புகைப்படத்தில் தங்கள் படங்களை ஒட்ட வைத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை பிற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
எவரெஸ்ட் மலையில் காணாமல் போன வழிகாட்டி! இறுதி சடங்கு செய்த பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications