யு.கே.: பெண் நோயாளிகள் கையில்... அசிங்கமாக நடந்து கொண்ட இந்திய டாக்டர்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் அவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய டாக்டர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த ஹபீப் லத்தீப்(48) என்பவர் இங்கிலாந்தில் உள்ள ஹென்ட்போர்ட் மெடிக்கல் சென்டரில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் 2008ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை 3 பெண் நோயாளிகளிடம் அவர்களின் கைகளில் உணர்ச்சி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கையில் சில்மிஷம் செய்துள்ளார்.

Indian doctor on trial accused of sexually assaulting patients in UK

அதாவது அந்த பெண்களுக்கு பின்னால் நின்றுகொண்டு அவர்களின் கையில் முதலில் பேனா, சாவி ஆகியவற்றை கொடுத்துள்ளார். அதன் பிறகு தனது பேண்ட் ஜிப்பை கழற்றி தனது ஆணுறுப்பை அவர்களின் கைகளில் வைத்துள்ளார். 2 பெண் நோயாளிகள் இது குறித்து வெளியே தெரிவித்தால் தங்களை யாரும் நம்ப மாட்டார்கள் என்று கூறி புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 37 வயது பெண் ஒருவர் கழுத்து பிரச்சனை மற்றும் தலைவலிக்ககாக லத்தீபிடம் சென்றுள்ளார். அவரையும் பரிசோதிக்கிறேன் என்ற பெயரில் அவரின் கையிலும் தனது ஆணுறுப்பை வைத்துள்ளார் லத்தீப். இதையடுத்து அந்த பெண் நேராக காவல் நிலையத்திற்கு சென்று லத்தீப் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லத்தீபை கைது செய்தனர்.

அந்த பெண் புகார் அளித்ததை பார்த்து லத்தீபால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பெண்களும் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை லத்தீப் மறுத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+