ஆண்டு வருமானம் ரூ.1,550 கோடி.. ஆனாலும் ஊபர் ஓட்டும் 86 வயது முதியவர்.. நெகிழ்ச்சி பின்னணி
பிஜி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 86 வயது தொழிலதிபர் ஒருவர் பிஜி நாட்டில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறார். 13 நகைக்கடைகள், 6 ரெஸ்டாரண்ட், 4 சூப்பர் மார்க்கெட் உள்பட பல தொழில்களை நடத்தி வரும் அவர் எந்த ஆடம்பரமும் இன்றி வாடகை கார் ‛ஊபர்' ஓட்டி வருகிறார். கார் ஓட்டுவதன் பின்னணி குறித்து இந்திய தொழில் முனைவோர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் 1,100 கடல் மைல் தொலைவில் பிஜி (Fiji) என்ற தீவு நாடு அமைந்துள்ளது. சமீபத்தில் நம் நாட்டை சேர்ந்த தொழில் முனைவோர் நவ் ஷா பிஜி நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் ‛ஊபர்' வாடகை காரில் பயணித்தார். அப்போது அவரது காரை முதியவர் ஒருவர் ஓட்டினார்.

இதையடுத்து நவ் ஷா அவரிடம் பேச தொடங்கினார். ‛‛கார் ஓட்டி கிடைக்கும் வருமானத்தை தினசரி செலவுக்காக பயன்படுத்துகிறீர்களா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு முதியவர் சொன்ன பதிலை கேட்டு அவர் வியப்படைந்தார்.
அதாவது அந்த முதியவர் நான் ஒரு தொழிலதிபர். ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறேன் என்று சொல்ல நவ் ஷாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுபற்றி அந்த தொழிலதிபர், ‛‛நான் ஒரு தொழிலதிபர். எனது கம்பெனி 175 மில்லியன் டாலர் வருமானம் (இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி) ஈட்டுகிறது.
நான் கடந்த 10 ஆண்டுகளாக 24 பெண் குழந்தைகளுக்கான படிப்புக்கு உதவி செய்து வருகிறேன். ‛ஊபர்' ஓட்டி கிடைக்கும் பணத்தை வைத்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறேன். எனக்கு 3 மகள்கள். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கினேன். தற்போது அவர்கள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பிற பெண்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவ வேண்டும் என்ற முடிவில் இதனை செய்து வருகிறேன்.
எனக்கு சொந்தமாக 13 நகைக்கடைகளை நடத்தி வருகிறோம். 6 ரெஸ்டாரண்ட், ஒரு பிஜி டைம்ஸ் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறோம். 4 சூப்பர் மார்க்கெட் உள்ளது. ஹோல்சேல் மற்றும் ரீடெயில் பெர்பியூம், மதுபானம் விற்பனையை நடத்தி வருகிறோம். இந்த தொழிலை நான் தொடங்கவில்லை. எனது தந்தை 1929ல் தொடங்கினார்.
அவர் இந்தியாவில் இருந்து வந்து 5 புவுண்ட் வைத்து தொழில் தொடங்கினார். அதற்கு முன்பாக அவர் ஒரு கம்பெனியில் பணியாற்றினார். ஆண்டுக்கு 15 பவுண்ட் சம்பளம் பெற்றார். அதில் 5 பவுண்ட்டை சேமித்து தொழில் தொடங்கினார். அவர் தான் இந்த தொழில்களை தொடங்கினார்'' என்று கூறி நெகிழ வைத்தார்.
இதையடுத்து நவ் ஷா, இப்போது 20, 30 வயதில் உள்ள இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அந்த தொழிலதிபர், ‛‛முதலில் நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருங்கள். அதன்பிறகு மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்க முடியும்'' என்று கூறினார். கார் ஓட்டியபடி அந்த தொழிலதிபர் சொன்னதை நவ் ஷா தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் பலரும் பிஜி நாட்டின் இந்திய வம்சாவளி தொழிலதிபரை பாராட்டி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications