காமன்வெல்த் போட்டி அதிகாரப்பூர்வ பாடல் வீடியோவில் தலைகீழாக இந்திய தேசிய கொடி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கிளாஸ்கோவில் துவங்கிய காமன்வெல்த் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பாடல் வீடியோவில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் புதன்கிழமை துவங்கியுள்ளன. போட்டிகளை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

Indian Flag Upside Down in Commonwealth Games 2014 Official Song Video

அதில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இந்தியர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டிகளில் 17 வகையான விளையாட்டுகள் தொடர்பான போட்டிகள் 11 நாட்கள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் 71 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்காட்லாந்தில் நடக்கும் மிகப் பெரிய போட்டிகள் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+