ரஷ்யா பறக்கும் ஜெய்சங்கர்.. இடையில் ஈரானில் முக்கிய மீட்டிங்.. சீனாவுடனும் பேச்சு.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 4 நாள் பயணமாக அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறார்.

Recommended Video

    ரஷ்யா செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர்

    இந்தியா - சீனா இடையே லடாக்கில் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. எல்லை மீறி இந்தியா சீனா எல்லைக்குள் வந்ததாகவும், அங்கு அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சீனா கூறியுள்ளது. ஆனால் இந்தியா இந்த துப்பாக்கி சூடு குற்றச்சாட்டை இதுவரை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

    பதற்றம் எப்படி

    பதற்றம் எப்படி

    எல்லையில் இப்படி பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 4 நாள் பயணமாக அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவிற்கு செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு 8 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உடன் சந்திப்பு நடத்துகிறார். ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் சார்பாக ரஷ்யாவில் கூட்டங்கள் நடந்து வருகிறது.

    என்ன கூட்டம்

    என்ன கூட்டம்

    ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடக்கும் கூட்டமும் ஒன்றாகும். இதில்தான் ஜெய்சங்கர் கலந்து கொள்ள இருக்கிறார். ரஷ்யா செல்லும் வழியில் எஸ் ஜெய்சங்கர் ஈரான் செல்ல வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஈரான் தலைவர்கள் உடன் அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

    சந்திப்பு திட்டம்

    சந்திப்பு திட்டம்

    ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷரீப் உடன் இவர் சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளது. ரஷ்யாவிற்கு செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இதன் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்த உள்ளார். எல்லையில் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பதற்றம்

    பதற்றம்

    எல்லை பிரச்சனை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கூட்டங்களில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது. இதில் இரண்டு நாடுகளும் மாறி மாறி புகார் வைத்தது குறிப்பிடத்தக்கது.. இந்த பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில் தற்போது அமைச்சர் ஜெய்சங்கர் சீன அமைச்சர் உடன் மீட்டிங் நடத்த உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+