இந்திய - சீன மோதல்.. சமாதானம் செய்ய தீவிரமாக முயலும் ரஷ்யா.. புடின் போடும் பிளான்... இதுதான் காரணம்!
மாஸ்கோ: இந்தியா - சீனா இடையே நடக்கும் மோதலை சரி செய்வதில் ரஷ்யா தொடக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த கரிசனத்திற்கு காரணங்கள் நிறைய உள்ளன.
இந்தியா சீனா இடையில் நிலவும் லாடக் மோதல் தற்போது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது ரஷ்யாவில் இந்தியா - சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே ஆலோசனை நடந்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இடையே ஆலோசனை நடைபெறுகிறது.
ரஷ்யாவில் தற்போது நடக்கும் மீட்டிங்தான் இந்த பிரச்னையை தீர்க்க போகும் கடைசி மீட்டிங்காக பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்கள் வரை நடத்திய மீட்டிங் எல்லாம் தோல்வியில் முடிந்த காரணத்தால், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடக்கும் மீட்டிங் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா ஏற்பாடு
இந்த மீட்டிங்கை ரஷ்யாதான் ஏற்பாடு செய்து உள்ளது. ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் எனப்படும் எஸ்சிஓ கூட்டம் ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியா - சீனாவை பேச வைத்து அமைதியை கொண்டு வர ரஷ்யா முயற்சிக்கிறது. ஏற்கனவே இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களை ரஷ்யா பேச வைத்தது. ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே நடந்த ஆலோசனை தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே ரஷ்யா மீட்டிங்கை ஏற்பாடு செய்துள்ளது.

ஏன் இப்படி
இந்தியா சீனா பிரச்சாஸ்னையை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா நினைக்கிறது. இந்தியாவும் சரி சீனாவும் சரி, பொதுவாக மத்தியச பேச்சுக்களை விரும்பாது. ஆனால் இரண்டு நாடுகளையும் எப்படியாவது பேச்சுவார்த்தையில் ஈடுபட வைத்து, அமைதியை கொண்டு வர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. கடந்த மே மாதம் இரண்டு நாட்டு பிரச்சனை தொடங்கியதில் இருந்தே ரஷ்யா இப்படி அமைதி பேச்சுவார்த்தை செய்ய முயன்று வருகிறது.

லடாக் வீரர்கள்
அதன்படி லடாக்கில் சீனா சிறைபிடித்த இந்திய வீரர்களை விடுவிக்க ரஷ்யாதான் உதவியது என்றும் செய்திகள் வந்தது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலில் லெப்டினன்ட் ஜெனரல் மீட்டிங் நடக்கவும் ரஷ்யாவே காரணம். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ண தூதர் போல ரஷ்யா செயல்படுகிறது. ரஷ்யாவின் இந்த ''நல்ல குணத்திற்கு'' காரணம் இல்லாமல் இல்லை.. இந்தியா - சீனாவை இணைக்க ரஷ்யா இப்படி தீவிர முயற்சி எடுக்க காரணம்.. அமெரிக்கா!

முதல் காரணம்
இந்தியா - சீனா பிரச்னையை தீர்த்து வைத்தால், ஆசியாவில் முக்கிய சக்தியாக கால் பாதிக்கலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. இந்தியா, சீனா இரண்டும் ஆசியாவில் பெரிய நாடுகள்.இவர்களை ஒன்றாக சேர வைத்து, தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டால் அது ரஷ்யாவிற்கு பலம் சேர்க்கும். இதனால் ஆசியாவில் அமெரிக்காவின் வலிமை குறையும். ஆசியாவில் அமெரிக்கா கால் பதிக்க காரணமாக இருக்கும் ஒரே நாடு இந்தியா என்பதால்.. இந்தியாவை தனது வழிக்கு கொண்டு வர ரஷ்யா நினைக்கிறது.

காரணம் 2
அதேபோல் இந்தியா - சீனா பிரச்னையை தீர்க்க அமெரிக்காவும் முயன்றது. ஆனால் இதை இந்தியா - சீனா இரண்டும் அனுமதிக்கவில்லை.டிரம்பின் கோரிக்கையை இரண்டு நாடுகளும் அனுமதிக்கவில்லை. ஆனால் இரண்டு நாடுகளும் ரஷ்யாவின் மத்தியசத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் இப்போதே அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஒருபடி மேலே சென்றுவிட்டது.. இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவை நம்பும் அளவிற்கு அமெரிக்காவை நம்பவில்லை என்ற பிம்பம் உருவாகி உள்ளது.

தீர்த்தால் என்ன
ஒருவேளை இந்திய - சீன பிரச்சனையை ரஷ்யா தீர்த்து வைத்தால் அதற்கு கைமாறாக ஏதாவது உதவிகளை ரஷ்யா கேட்கும். எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்கும். பொதுவாக போர் காலத்தில் சண்டை நாடுகளை விட சமாதானம் செய்த நாடுகளே அதிக பலன் அடையும் என்பதால்.. எண்ணெய் வள நாடுகளின் மோதலில் அமெரிக்கா பலன் அடைவது போல.. ரஷ்யாவும் பொருளாதார ரீதியாக, ஒப்பந்த ரீதியாக அதிக பலன் அடைய நினைக்கிறது.

பைடன் வந்தால்
அமெரிக்க அதிபராக பைடன் வந்தால் அவர் ரஷ்யாவை கண்டிப்பாக எதிர்ப்பார். இதனால் ரஷ்யாவிற்கு தார்மீக ஆதரவு கொடுக்கும் வகையில் இப்போதே இந்தியா, சீனாவை ரஷ்யா தன்பக்கம் இழக்க நினைக்கிறது. டிரம்புடன் இந்தியா நெருக்கம் காட்டும் அளவிற்கு பைடன் உடன் நெருக்கம் காட்ட வாய்ப்பு இல்லை. இதனால் இப்போதே பேருந்தில் ஜன்னல் சீட் போட ரஷ்யா முயல்கிறது என்கிறார்கள்.. இதனால் அமைதி பேச்சில் ரஷ்யா தீவிரம் காட்டுகிறது. இன்று மீட்டிங்கில் உண்மை என்ன..நிலைமை எப்படி மாறுகிறது என்று தெரிந்துவிடும்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications