தென் கொரிய பெண்ணை கண்ட இடத்தில் தடவி அத்துமீறிய இந்தியர்.. லைவ் ஸ்ட்ரீமிங்.. தொக்காக தூக்கிய போலீஸ்!
ஹாங்காங்: சீன நாட்டின் ஹாங்காங் நகரில் தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயணியான இளம்பெண், லைவ் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, அந்த நபர் அவரிடம் அத்துமீறியுள்ளார்.
ஹாங்காங் நகரின் சென்ட்ரல் பகுதியில் உள்ள டிராம் நிறுத்தத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான இளம்பெண் காத்திருந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் வழி கேட்டு அவரை அணுகியுள்ளார். பின்னர் அந்த நபர் அந்த இளம்பெண்ணை நெருங்கி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இளம்பெண் மறுக்க, அவரை தகாத முறையில் தொட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.

"நான் தனியாக இருக்கிறேன்.. வா" எனக் கூறி, அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் தொட்டும் தடவியும் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்பெண், தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை வளைத்துப் பிடித்து வலுக்காட்டயமாக சுவரின் மீது தள்ளி அப்பெண்ணின் மார்பைப் பிடித்து அழுத்தி, முத்தமும் கொடுக்க முயன்றுள்ளார்.
அப்பெண் அதைத் தடுக்க முயன்று அழுது, "என்னைக் காப்பாற்றுங்கள்" எனக் கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த அனைத்து சம்பவங்களையும், அந்த இளம்பெண் Twitch எனும் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக ஸ்ட்ரீம் செய்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் அத்துமீறிய அமித் ஜெரியல் என்ற அந்த இந்தியர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில், இளம்பெண்ணுக்கு இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று, இந்தியாவின் மானத்தை வாங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Twitch streamer was sexually assaulted live in Hong Kong by a stranger. pic.twitter.com/7YwWkrQjLy
— DramaAlert (@DramaAlert) September 11, 2023
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications