இந்திய எண்ணெய் கப்பலில் தீ விபத்து - 7 சீனத் தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

சீனக் கடல் பகுதியில் சுமார் 50 ஆயிரம் டன் எண்ணெய்யுடன் இந்திய கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கப்பல் தீடிரென பழுதடைந்ததால், செஜியாங் மாகாணம், சவுஷான் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.
கப்பலில் இருந்த எண்ணெயை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கப்பலில் தீப்பிடித்து எண்ணெய் டேங்கர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications