யு.கே.: பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு தொல்லை.. இந்திய டாக்டர் மீது வழக்கு
லண்டன்: லண்டனில் பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளி டாக்டர் மகேஷ் பட்வர்தன்(53). அவர் கடந்த 2008ம்

ஆண்டு ஜூலை மாதம் முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 6 பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டும், தடவியும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் அந்த குற்றச்சாட்டை மகேஷ் மறுத்துள்ளார். மகேஷ் ஒரு பெண் நோயாளியின் பின்னழகில் இருந்த டாட்டுவை பார்க்க அவரது ஆடையை அவிழ்க்க வைத்துள்ளார்.
மேலும் தன்னிடம் சிகிச்சை பெற வந்த மற்றொரு பெண்ணின் மர்ம உறுப்பு பகுதியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தவிர 2 குழந்தைகளின் தாயான 37 வயது பெண் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தபோது எல்லாம் அவரை கட்டிப்பிடித்ததுடன் அவரது பின்னழகை பிடித்துப் பார்த்துள்ளார்.
நன்றாக பாடும் மகேஷ் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியுள்ளார். பெண் நோயாளிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணை உல்விச் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடுத்த வாரம் விசாரணை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications