ஐஎஸ் அமைப்புக்காக உயிரை விட என் சகோதரர் தயார்: புதிய ஜிஹாதி ஜானின் சகோதரி
லண்டன்: இந்திய வம்சாவளி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான சித்தார்த்தா தார் அந்த அமைப்புக்காக இறக்கவும் தயாராக இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் முகமூடியுடன் இருந்த நபர்

இங்கிலாந்தில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்த்தா தார் என்கிற அபு ருமைசா என்று நம்பப்படுகிறது.
இந்துவாக வளர்ந்த சித்தார்த்தாவை அவரது முஸ்லீம் நண்பர் இஸ்லாத்திற்கு மாற வைத்து ஆயிஷா என்ற பெண்ணையும் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் அவரை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான அல் முஜாஹிரூனிலும் சேர்த்துவிட்டார்.
அதன் பிறகு சித்தார்த்தா சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் அபு ருமைசாவின் சகோதரி கோனிகா தார் கூறுகையில்,
என் சகோதரர் தான் சாவுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் இதை போன் செய்து கடந்த ஆண்டு தெரிவித்தார். அவர் சிரியாவுக்கு சென்றதில் இருந்தே திரும்பி
வந்து திருந்தி வாழுமாறு அவரை வலியுறுத்தி வருகிறேன்.
அவரை மூளை சலவை செய்துவிட்டனர். அவர் தீவிரவாதியாக இருந்தாலும் என் சகோதரர் தான். அவர் சிரியாவில் சுட்டுக் கொல்லப்படுவதை விட இங்கிலாந்து வந்து
சிறையில் இருந்து திருந்தி வருவதையே நான் விரும்புகிறேன். கால்நடை மருத்துவராக விரும்பிய அவர் வழிமாறி தீவிரவாதியாகிவிட்டார் என்றார்.
அபு ருமைசா தான் புதிய ஜிஹாதி ஜான் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications